பக்கம்:இளந்துறவி (நாடகம்).pdf/67

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66 காதல் எங்கே ! பானுமதி : விளங்குவதற்கு அதிலே என்ன இருக்கிறது? இங்கிலீஷ் நாவலிலே படித்தவிஷயமும், சினிமாவிலே பார்த்ததுந்தான் இருக்கிறது. வேருென்றும் இல்லை. லலிதா : நீ இப்படிப் பேசுவாயென்று நான் நினைக்கவே இல்லை. நாம் படித்த விஷயங்களிலே தப்பென்ன இருக்கிறது? மேல் நாட்டு சமூக நடைமுறை தப்பாக இருந்தால் அந்தக் கதைகளேயெல்லாம் இன்றைக்கும் நமக்குக் கல்லூரிகளிலே படிக்கும்படி பாடமாக வைப்பார்களா ? எனக்கென்னவோ மேல்நாட்டுப் பழக்க வழக்கங்கள்தான் ரொம்பவும் பிடிக்கிறது. பானுமதி : மேல்நாட்டுச் சமூக நடைமுறையிலும் நல்ல அம்சங்கள் இல்லாமலில்லை. ஆனால், அடிப்படை யான நோக்கங்களிலே நமக்கும் அவர்களுக்கும் எத்தனையோ மாறுபாடுகள் உண்டு. நமது பண் பாட்டிற்கு அவை சரிப்படுமா ? லலிதா : அப்போ அவற்றைப்பற்றி நாம் ஏன் இன் றைக்கும் படிக்க வேண்டும் ? தேசம் விடுதலை யடைந்த பிறகும் அவற்றையே படிப்பானேன் ? அந்தக் கதை எல்லாம் எதற்கு ? பானுமதி : ஆங்கிலம் படிப்பதனால் நமக்கு எத்தனையோ நன்மை உண்டு. ஆங்கிலத்தின் மூலமாகத்தானே நமக்கு விஞ்ஞான அறிவெல்லாம் கிடைக்கிறது ? அது வேண்டாமா ? லலிதா : பானுமதி, நீ சொல்லுவது எனக்குப் புதிராக இருக்கிறது. விஞ்ஞான அறிவெல்லாம் வேண்டு மானுல் விஞ்ஞானத்தை மட்டும் படிக்கிறதுதானே ? ஹார்டி நாவல் எதற்கு ?