பக்கம்:இளந்துறவி (நாடகம்).pdf/70

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காதல் எங்கே ! 69 லலிதா (சட்டென்று) : பானு, நீ பதில் சொல்லாதே. நான் அவருக்குப் பதில் சொல்லுகிறேன். சதாசிவம் : ஆமாம் பானு, அவளே சொல்லட்டும். அப்பொழுதுதான் அவளுடைய உள்ளக் கருத்தை நீ தெரிந்து கொள்ளமுடியும். லலிதா அதற்காக நான் பேச வரவில்லை. பானு நீங்கள் சொல்வதையே சரியென்பாள். அவளும் நீங்களும் ஒன்றுதானே? பானுமதி : அதிலென்ன சந்தேகம் லலிதா ? அதனல் தான் நான் அவரை என் அண்ணனுகவே பாவித் திருக்கிறேன். லலிதா சரி, நீயும் உன் அண்ணனேடு சேர்ந்து கொண்டே பேசு பார்க்கலாம். இப்போ நாம் பார்த்த படத்திலே என்ன தப்புக் கண்டீர்கள் ? சதாசிவம் : என்ன தப்பா ? எத்தனையோ சொல்லலாம். முக்கியமாக அந்தக் காதலனும் காதலியும் காட்சி யளித்தார்களே-சுத்தப் பயித்தியங்களாக இல்லையா ? லலிதா : அவர்கள் தனியே சந்தித்துக் காதல் செய்து கொண்டிருந்தார்கள்-அதிலே என்ன தப்பு? அது காதல் காட்சி. சதாசிவம் : தப்பில்லை, லலிதா-காதல் ரொம்ப உயர்ந்த விஷயம்...அதை அப்படிக் கேலிக் கூத்தாகப் பண்ணக் கூடாது என்றுதான் சொல்லுகிறேன். பானுமதி லலிதா, நீ அந்தக் காதலியை நினைத்துப் பார் அவள் ஆடரதும், மரத்தின்மேலே சாயரதும், பிறகு ஒடரதும்-குழந்தைகள் தும்பி பறப்பதைப் போலச் சுற்றுவதும். 5