பக்கம்:இளந்துறவி (நாடகம்).pdf/98

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காதல் எங்கே ! 95 சரோஜா : இருந்தாலும் உங்கள் அண்ணுவின் மனத் துணிச்சல் இருக்கிறதே, அதை நான் ஒப்புக் கொள்ள முடியாது. பானுமதி அவளுடைய காதலிலே அவருக்கு அத்தனே நம்பிக்கையிருக்கிறது. தம்முடைய காதல் வலி மையே லலிதாவைக் காப்பாற்றும் என்றும் அவர் நிச்சயமாக நம்புகிரு.ர். சரோஜா : நல்ல நம்பிக்கையம்மா. பானு, நீ எப்போ கல்கத்தாவுக்குத் திரும்பிப் போகிருய் ? பானுமதி : இன்னும் இரண்டு வாரத்தில்...... சரோஜா : அதுவரையிலும் நீ லலிதாவை நன்ருகக் கவனித்துக்கொள். பானுமதி : அது சரி, சரோஜா. உன்னிடத்திலே ஒன்று கேட்டுகொள்ள ஆசை. நீ இந்த விஷயத்தை என்னிடம் தனியாகச் சொன்னதுக்கு ரொம்ப நன்றி சொல்ல வேணும். சரோஜா. இதெல்லாம் எதுக்கு, பானு ? லலிதா விஷ யத்திலே எனக்கு மட்டும் அக்கறையில்லையா ? அவளுக்குத்தான் என்னைக் கண்டால் அவ்வளவு பிடிக்காது. பானுமதி : அப்படி ஒன்றுமில்லை. சரோஜா, உன்னைப்பற்றி அவளுக்கும் பிரியம் உண்டு. நீ இந்த விஷயத்தைப் பற்றி வெளியிலே யாரிடத்திலும் பேசாதே. நான் கல்கத்தாவுக்குப் போகிறதுக்குள் உன்னை மறுபடியும் சந்திக்கிறேன். போய் வரட்டுமா ? மறுபடியும் டீடார்ட்டி வைத்தால், என்னை மறந்துடாதே. (புறப்படுகிருள்.)