பக்கம்:இளமையின் நினைவுகள்.pdf/107

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

106 இளமையின் நினைவுகள் நாடகம் என்று சொன்னேன்; ஆல்ை எந்த நாடகம் என்று சொல்லவில்லை அல்லவா! அது ஒரு சீவ காருண்ய நாடகம். மாடும், ஆடும், கோழியும், கொசுவும் கூட்டம்கூடித் தாம் மக்களுக்குச் செய்யும் நன்மைகளை விளக்கி, அத்தனை நன்மை பெறும் மனிதன் அவைகளுக்கு எந்தெந்த வகையில் இன்னல் செய்கிருன் என்பதைக் காட்டும் நிலை ஒரு புறம்: உலகில் அரசரும் அமைச்சரும் பிறரும் நாட்டில் மனிதப் பண்பற்று வாழ்கின்ற வாழ்க்கை முறை ஒரு புறம். தவறு செய்கின்றவர்களைத் தண்டனைக் குள்ளாக்கும் இ ய ம, ன் நாட்டுக் காட்சிகள் ஒரு புறம். இப்படிச் சென்றது அக் கதை என்று நினைக்கின்றேன். முழுதும் நன்ருக நினைவில் இல்லை, மொத்தத்தில் அது ஒரு சீவகாருண்ய நாடகம். நன் பறவை விலங்குகளின் மாநாட்டுக்கு இடபதேவராகத் தலைமை வகித்தேன். அது மட்டும் நன்கு நினைவிருக்கிறது. எனது பள்ளியில் கிராமத்தில் கிருட்டினணுக நடித்த பிறகு இந்துமதப் பள்ளியில் அடிக்கடி நடைபெறும் சிறு நாடகங் களில் நான் பங்கு பெறுவது உண்டு. ஆகவே எனக்கு இதிலும் ஒரு முக்கிய பாகமே கொடுத்திருந்தார்கள். -- அன்று நாடகம் இல்லையாதலால் எங்களில் ஒரு சிலர் இரண்டொரு ஆசிரியர்களுடன் சென்னை நகரைச் சுற்றிப் பார்க்கப் போனுேம். என்னென்ன பார்த்தோம் என்பது கூட நினைவில் இல்லை. இரவு தங்கிய இடத்துக்கு வந்து விட்டோம். அப்பா மட்டும் எங்கெங்கோ அலைந்தார். மாநாடு நடத்தியவர்களுள் யாரோ அவருக்கு நாடகம் நடத்த இடம் தருவதாக வாக்களித்தார்கள் போலும். கடைசி யில் அப்பா, அவர்களைப் பார்த்தாரோ இல்லையோ எனக்குத் தெரியாது. அந்தப் பந்தலில் மட்டும் நாடகம் நடக்கவில்லை. என்ருலும் சென்னைக்கு வந்து நாடகம் நடக்காமல் திரும்பு வதா என அப்பா அவர்கள் திட்டமிட்டார்கள். எப்ப்டியா