பக்கம்:இளமையின் நினைவுகள்.pdf/124

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

19. கோயில் சண்டை எங்களுர்க் கோயில் பற்றியும் அதில் நடந்த விழாக்கள், தேர்தல்கள் பற்றியும் முன்னே பல முறை கூறியுள்ளேன். அந்தக் கோயிலால் தொடங்கிய சிறு சண்டை பெரிதாகி ஊருக்குள் துப்பாக்கிச் சத்தம் கேட்க, அதனுல் சிலர் இறக்கப் பலர் காயமுற நேர்ந்ததை நினைத்தாலும் நெஞ்சு நடுங்குகிறது. எல்லாரும் ஒ ன் றி த் தொழவேண்டிய இறைவனின் பொருட்டுத் தமக்குள் தாமே மாறுபட்டுக் கலகம் விளைத்துக் கொலையும் செய்யத் துணிந்த மக்கள் நிலையை என்னென்பது? கோயில் அறக்காப்பாளர்கள் தம் மனம்போன போக்கிலே போக வாய்ப்பும் வழியும் . அந்தக் காலத்தில் இருந்தன. எனவே அதற்குப் போட்டி யும் பலமாக இருந்தது. இந்தக் காலத்திலும் ஒரு பயனும் இல்லை என்ருலும்கூட, வெறும் படாடோப வாழ்வுக்காகப் பலர் பஞ்சாயத்துத் தேர்தலில் தொடங்கிப் பாராளுமன்றத் தேர்தல் வரையில் போட்டியிட்டுப் பணத்தைப் பணமென்று பராது செலவிடுவதைக் காண்கிருேம். தர்மகர்த்தாவானுல் பலவித செளகரியங்களைத் தங்களுக்கும் தங்களைச் சார்ந்தவர் களுக்கும் செய்துகொள்ளும் வாய்ப்பு இருக்குமானல் ஏன் அவர்கள் போட்டி இட மாட்டார்கள்? அதிலும் ஒரே இனத்தவர் என்று கூறிக்கொண்டு தம் வீட்டு விழாக்களில் ஒன்றிக் கலந்துண்ணும் அவர்கள் இக் கோயிலால் இரண்டு பட்டார்கள் என்ருல் அதனிடம் அவர்கள் கொண்டுள்ள மோகத்தை என்னென்பது? இன்று கோயில்கள் அரசாங்க உடைமையாகிவிட்டன. அதற்கென அலுவலாளர்களை நியமித்துவிட்டு மேற்பார்வை