பக்கம்:இளமையின் நினைவுகள்.pdf/133

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

132 இளமையின் நினைவுகள் நின்ருர். நான்தான் முதற் பலகையில் உட்கார்ந்திருந்தேன். வா’ என்று அதட்டினர். மற்றவர்களை அவர் கவனித்தாரா, அன்றிக் கவனித்து விட்டுவிட்டாரா என்பது இன்றும் எனக் குப் புரியவில்லை. என்னை அழைத்துக்கொண்டே சென் ருர். அதற்குள் பிற்பகல் இடைவேளை முடிந்து வகுப்புத் தொடங்கும் நேரம் வந்துவிட்டது. மாணவர்கள் வரிசை வரிசையாக வந்துகொண்டே இருந்தார்கள். அவர்களுக்கு இடையில் நிறுத்தி ஓங்கி ஒரு பிரம்படி கொடுத்தார். மற்றவர் களைப்பற்றியும் என் உடனிருந்த கூச்சல் எழுப்பியவரைப் பற்றியும் அவர் கவனிக்கவில்லை. என்னையும் என்னவென்று கேட்கவில்லை. என்னைப்பற்றி ம ற் ற வரி ட மும் ஒன்றும் கூறவில்லை. நடு இடத்தில் கொண்டு வந்து நிறுத்தி நீண்ட பிரம்பால் ஓங்கி ஒரடி கொடுத்துப் போ' என்ருர். எனக்கு அப்போது அழுகையும், ஆத்திரமுமாக இருந்தது. என்ருலும் நாளாக ஆக அந்த அடி-ஒரே பிரம்படி-என் வாழ்வை எவ்வளவு துய்மையாக்கிற்று என்பதை எண்ணும்போது என்னை அறியாமலே என் வாய் அவரை வாழ்த்திற்று. அவர் இன்னும் தஞ்சையில் வாழ்ந்துகொண்டுதான் இருக்கிருர். அந்தப் பொல்லாதபிள்ளைகளோடு நான் சேரக்கூடாது என்பது தான் அவர் விருப்பம். என் நடத்தையையும், நான் பள்ளி வந்து செல்லும் விதத்தையும் கண்டுகொண்டே வந்த அவர், நான் எப்படியோ அந்த பொல்லார் குழுவில் அகப் பட்டதை அறிந்தார். அந்தக் கூட்டத்தை முறிக்கவே அன்று அவர் அத்தகைய அடியினைக் கொடுத்தார். உடன் அவர் களையும் அழைத்து வந்து அடித்திருப்பாராயின், எல்லோ ரும் அடிபட்டோம் என்ற நினைப்பில் மறுபடியும் ஒரு வேளை நான் அவர்களோடு சேர்ந்து இருந்திருப்பேன். அதனு லேயே அவர் என்னை மட்டும் தனியாக அழைத்துத் தண் டனை தந்தார். அவர் குறிப்பை அறிந்தோ அறியாமலோ