பக்கம்:இளமையின் நினைவுகள்.pdf/159

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

158 இளமையின் நினைவுகள் அம்மா என்னைப் பார்த்தார்கள்; பேசினர்கள். நான் சொன்னேன் பார்த்தாயா மூன்றணு சோடா புட்டிக்காக ஐந்தணு கண்ணுடி போயிற்று. போய் அவரை உடனே அழைத்துக் கொண்டு வா. மிகுதியை எடுத்துப் போகச் சொல். அப்போதே எடுத்துப் போகச் சொன்னேன். அவர் சென்று விட்டார். நம் வீட்டில் இருந்ததால் தவறி இரண்டொருவருக்கு உடைத்துக் கொடுத்தோம். அதன் பயன்தான் இது. நமக்கு உரிமை அல்லாததை நாம் விரும் பில்ை ஒற்றைக்கு இரட்டையாக நமக்கு நட்டம்தான் வந்து சேரும். உம். அவரை அழைத்து வா என்று கூறினர்கள். வந்தவரிடம் எல்லாவற்றையும் சொன்னர்கள். நான் ஒடி அவரை அழைத்து வந்தேன். அம்மா உடைந்த கண்ணுடி யைக் காட்டி 'உம்மால் எனக்கு எவ்வளவு நட்டம் பார்த்திர் களா? மூன்றணு சோடாவுக்கு ஐந்தணு கண்ணுடி? அது தான் வேண்டாம் என்றேன். உடனே எடுத்துச் செல்லுங் கள் என்ருர்கள். அவர் தயங்கினர். பக்கத்தில் உள்ள வர் காரணம் சொன்னர், இதை இவர் வீட்டிற்கு எடுத்துச் சென்ருல் வீட்டில் அவர் மனைவி 'அதற்கு ஏன் செலவு செய் தாய்? என்று ஏசுவார். அதனுல்தான் பயப்படுகிருர். சரி நான் எடுத்து வைக்கிறேன். நாளை நீ எடுத்துக் கொண்டுபோ' என்று சொல்லி, அந்தவீரர் தம் வீட்டுக்கு கொண்டு செல் வதைக் கூறி அவரைக் காப்பாற்றினர். சோடா புட்டியும் வெளி யில் சென்றது. அம்மா ஆறுதல் அடைந்தார்கள். என்னை அழைத்து இதைப் பார்த்துக் கொண்டாயல்லவா! உனக்கு உரிமை இல்லாததை நீ விரும்பினுல் இம்மாதிரி நட்டங்கள் தான் உண்டாகும். சாக்கிரதையாக நட என்று அறிவுரை கூறினர்கள். இன்றுவரை அவர்கள் சொற்படி கூடிய வகை யில் எனக்கு உரிமை இல்லாததை நான் பற்ருமல் வாழவே முயல்கின்றேன். அவர்கள் அருள் நலம் என்னைக் காக்கிறது 6T”6ğT6 Jf 6t)[fi [).