பக்கம்:இளமையின் நினைவுகள்.pdf/37

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

36 இளமையின் நினைவுகள் இல்லை. சொன்னல் அப்போதே அவர்களிடம் சண்டையிட்டு என்றும் அவர்களை வீட்டுக்கு வராமல் செய்திருப்பார்கள் அவர்கள். அத்தனை கண்டிப்பு அவர்களுடையது. என்ருலும் என் உள்ளம் மட்டும் அவர்களைக் காணும் தோறும் நம்பிக்கைத் துரோகி என்று எண்ணிக்கொண்டே இருக்கும். இன்றைக்கும்கூட அவர்கள் செய்துவிட்ட அந்தச் சிறுசெயல் எனக்கு யாரையும் ஆராயாது நம்பாதே என் புத்தி புகட்டிக் கொண்டே இருக்கிறது. - இன்னுெரு உறவினர் எங்கள் வீட்டில் உண்டான சிறுபாகப் பிரிவினையைத் தீர்க்க வந்தார். என் அம்மாவுக்கும் பெரியம்மாவுக்கும் உண்டான பாகப்பிரிவினை அல்ல. அது வேறு ஒரு சிறுபாகப் பிரிவினை. அதில் உள்ள அத்தனையையும் எங்களுக்கும் எதிரில் உள்ள மற்றவர்களுக்கும் பங்கிட்டுக் கொடுத்தல்தான் முறை. ஆனல் அவர் அப்படிச் செய்யவில்லை. உள்ள பொருள்களில் தனக்கு வேண்டிய தென்று ஒரு சிலவற்றை எடுத்து வைத்துக் கொண்டார். நாங்கள் இல்லாதபோது சிலவற்றை மற்ற வருக்குக் கொடுத்துவிட்டார். ஒரு வீட்டில் சாமான்களை இட்டுப் பொதுவாக அவ்வீட்டின் சாவியை அவரிடம் ஒப்பு வித்திருந்தோம், அவர் அவ்வீட்டின் சாவியையே மற்ற வரிடம் கொடுத்து அவருக்கு வேண்டியவற்றை நாங்கள் அறியாமலேயே எடுத்துச் செல்லச்சொல்லிவிட்டார். இவையெல்லாம் நான் சற்று வளர்ந்த பிறகு நடைபெற்ற நிகழ்ச்சிகள் ஆனமையின் அவர்களைப்பற்றி இன்னர்' 'இனியார்' என அறுதியிட எனக்கு வாய்ப்புக்கள் அளித்தன. எப்படியோ அவைகளையெல்லாம் கண்டுகொண்டே என் இளமைப்பொழுது கழிந்துகொண்டே வந்தது. இந்த உற்றார் உடன் பிறந்தாரையும் எண்ணும் போது தான் ஒளவைப்பாட்டி எப்படி உணர்ந்து உண்ர்ந்து