பக்கம்:இளமையின் நினைவுகள்.pdf/40

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

42 இளமையின் நினைவுகள்

நல்லவர் யார் - 39 அந்தக் காலத்திலெல்லாம் நான் ஆற்றுக்குச் சென்று அங்கு மணலில் சிவலிங்கம் செய்து, பாட்டி கோயிலுக்கு எடுத்துச் சென்ற பூக்களில் மீதி இருப்பவற்றையும் கழித்தவற்றையும் கொண்டுவந்து பூசை செய்வேன். அப்படியே சில சமயங்கள் என்னை அறியாது உட்கார்ந்து விடுவதும் உண்டு. இரண்டொரு நல்ல நண்பர்கள் என்னுடன் ஒத்துழைத்து நீர் ஊற்றுத் தோண்டி உதவுவார்கள். சிலர் கிண்டல்' செய்து மணலைவாரியும் இறைப்பார்கள். அன்று அழைத்துச் சென்ற நண்பர்கள் அந்தக் கிண்டல்காரர்கள்தாம். நான் அவர்களோடு வேடிக்கையாக ஆற்றங்கரைக்குச் சென்றேன். அங்கே ஒரு நாய்க்குட்டி உயிருக்கு ஊசலாடிக் கொண்டி ருந்தது. கண் விழிக்க வில்லை; அசைவும் இல்லை. மூச்சு மட்டும் அதிகமாக முட்டிக்கொண்டு வந்தது. அந்த நண்பர்கள் இருவரும் அதைக் கையில் எடுத்துக்கொண்டு நடு ஆற்றிற்கு அழைத்துச் சென்றார்கள். அங்கு பள்ளமும் தோண்டினர்கள். பிறகு என்னிடம் 'இந்த நாய்க்குட்டிக்கு எல்லாம் ஒடுங்கிவிட்டது. அது மூச்சுவிடுவதைப் பார்த்தால் ஐயோ பாவம் என்றில்லையா என்றார்கள். உண்மையிலேயே அந்தக் காட்சி கொடுமையாகத்தான் இருந்தது. நான் "ஆம்" என்றேன். நீ பூசை செய்வதைப்போல் இன்றும் செய். அனைவரும் இந்த நாய்க்குட்டியைப் பள்ளம் தோண்டி அதில் மூடி அதன்மேல் சிவலிங்கம் எழுப்பில்லை அப்போது நாய் துன்பம் இல்லாமல் சாகும் என்றார்கள். நானும் சரி என்றேன். மூவரும் சேர்ந்து குழி தோண்டிப் பின் கோயில் எடுக்கலாம் என்றேன். அவர்கள் குழியெல்லாம் தோண்டினார்கள். என்றாலும் கடைசியில் மூடிச் சிவலிங்கம் செய்யும் போது தாங்கள் பூக்கள் கொண்டு வருவதாகவும் அதற்குள் எல்லாம் செய்தாகவேண்டும் என்றும் சொன்னர்கள். ஆனால் அதற்குள் நாயின் மூச்சு ஒடுங்கி உயிர் பிரிந்தேவிட்டது. நான் என்ன செய்வது என அறியாது திகைத்தேன். வந்தி