பக்கம்:இளமையின் நினைவுகள்.pdf/98

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மறைந்த தந்தையார் 97 தெளித்த ைக யோ டு கோலியாடுகிறது. பிள்ளைகளின் நிலையே நிலை: கவலையற்று அவை வாழ்கின்றனவே என்ருர். அச்சொற்கள் என் காதுகளைத் துளைத்தன. அப்போதுதான் நான் செய்த தவறு எனக்குப் புரிந்தது. என்ருலும் நான் விளையாட்டை நிறுத்தவில்லை. அதில்தான் என் விளையாட்டுப் புத் தி விளங்கிற்று. பேசிக்கொண் டிருந்த இருவரும் சிறிது நேரம் பார்த்து எ ன க் கா க இரக்கப்பட்டு அப்பால் சென்று விட்டார்கள். ஆல்ை நான் விளையாடிக்கொண்டே இருந்தேன். அன்றைக்கு அந்த விளையாட்டைப் பற்றி நான் அதிக மாக நினைக்கவில்லை. என்ருலும் வயது ஆக ஆக அந்தப் பெரியவர் கூறிய சொற்கள் அடிக்கடி என் நினைவில் வந்து கொண்டே இருக்கும். இப்படி உற்ற தந்தையார் செத்துக் கிடக்க, நான் கோலியாடி விளையாடிக்கொண்டிருந்த இழி தகைமையை எண்ணி நைந்தேன். அண்ணல் காந்தி அடிகளாரது சுய சரிதத்தைப் பயிலும்போது அவர் தந்தையார் இறந்த காலத்தில் தாம் இருந்த நிலையை ஒளி மறைவில்லாது எழுதியுள்ளமை அறிந்தேன். அதுபோன்றே நான் என் தந்தை இறந்த இரண்டாம் நாள் - இளையணு யினும் - சிறிதும் வருத்தமின்றிப் பிறருடன் விளையாடிக் கொண்டிருந்த இழிவை யாரிடமாவது சொல்லவேண்டும் என நினைத்தேன். இதோ வாய்ப்பு வந்தது. இன்று உங்கள் முன் எழுதி வைத்துவிட்டேன்.