பக்கம்:இளைஞர்களுக்கு தந்தை பெரியார் வரலாறு.pdf/58

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தந்தை பெரியார்

கொண்டிருந்த பெரியாருக்கு, அவர் உடல் நலத்தைக் கவனிக்க நேரமில்லாமல் இருந்தது.

அவருடைய நிலையை அறிந்து, அவருக்குத் தொண்டு புரிய முன்வந்தார் ஒரு பெண்மணி. அவர்தான் மணியம்மையார்.

மணியம்மையாருக்கு இளம் வயது. ஆயினும் நாட்டுத் தொண்டாற்றும் பெரியாருக்குத் தொண்டு செய்யும் பணியினை ஏற்றுக் கொண்டார்.

திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்றோ. மற்ற பெண்களைப்போல் இல்லற வாழ்வு நடத்த வேண்டும் என்றோ அவர் நினைக்கவில்லை. கொள்கைக்காக வாழும் பெரியாருக்காக வாழ்வதே தம் கொள்கையாகக் கொண்டு விட்டார்.

1949 ஆம் ஆண்டு, தம் எழுபத் தோராம் வயதில் பெரியார் எதிர்காலத்தைப் பற்றி எண்ணினார். தந்தையார் சட்டிய ஏராளமான சொத்துக்கள் இருந்தன. திராவிடர் கழகத்திற்காக அவர் சேர்த்துவைத்த சொத்துக்களும் பணமும் நிறைய இருந்தன. இவையாவும் வீண்போகாமல் இருப்பதற்கு ஒர் ஏற்பாடு செய்ய வேண்டும் என்று எண்ணினார்.

அவருக்கு மிக மிக உண்மையாக இருந்தவர். மணியம்மையார். அவர் நலம் பேணுவதில் கண்ணும் கருத்துமாக இருந்தவர் மணியம்மையார்.

மணியம்மையாருக்கு பண ஆசையோ, நகை ஆசையோ, துணி ஆசையோ வேறு எந்த விதமான ஆசைகளோ கிடையாது. பெரியாருக்குத் தொண்டு செய்யும் கடமை ஒன்றிலேயே கண்ணும் கருத்துமாய் இருந்தார்.

யாரையும் எளிதில் நம்பாத பெரியார். தமது

55