பக்கம்:இளைஞர்களுக்கு தந்தை பெரியார் வரலாறு.pdf/63

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தந்தை பெரியார்

ஒடுக்கப்பட்ட மக்கள் பெரியாரை நன்றியோடு நினைக்கிறார்கள். அவர் தங்களுக்காகப் போராடியதை எண்ணி அவரைப் பெருமைப் படுத்துகிறார்கள்.

உத்தரப்பிரதேசத்தில் இன்று உள்ள அரசு 'பெரியார் சதுக்கம்' என்ற ஒர் இடத்தில், தாழ்த்தப்பட்ட மக்களுக்காகப் போராடிய அயந்து பெரும் தலைவர்களுக்குச் சிலை வைத்துப் பெருமைப்படுத் தியது. அதில் நம் பெரியாரும் ஒருவர்.

இன்று நம் தமிழர் தலைவராக விளங்கும் தளபதி வீரமணி அவர்கள், ஆயிரக்கணக்கான திராவிடர் கழகத்தினருடன் சென்று. அந்த விழாவில் கலந்து கொண்டு, அந்த மக்களின் நன்றி உணர்வைக் கண்டு பூரித்துப் போய்விட்டார்.

இப்படி நாடெல்லாம் போற்றும் பெரியாரை நாமும் போற்றுவோம்.

அவர் காட்டிய வழியில் நின்று, கடவுள். மதம், சாதி, வேதம், புராணம், சாஸ்திரம் ஆகிய தீமைகளை ஒழித்துக் கட்டுவோம். அறிவு வழி நடப்போம்.

மக்கள் யாவரும் சமம் என்ற எண்ணத்தோடு யாவரும் ஒன்றாக ஒற்றுமையாக நன்றாக வாழுவோம்!

வாழ்க பெரியார்!
வாழ்க மாந்தர் நேயம்!
வாழ்க தமிழ்நாடு!

60