பக்கம்:இளைஞர்க்கான புத்தமதக் கதைகள்.pdf/10

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

6

இளைஞர்க்கான புத்தமதக் கதைகள்

2. ஒரு பிடி கடுகு

கெளதமைக்குத்‌ தன்‌ குழந்தை மேல்‌ அளவு கடந்த அன்பு உண்டு. இரண்டு வயதுள்ள ௮க்‌குழந்தையின்‌ நகைப்பும்‌, களிப்பும்‌ அவளுக்கு மகிழ்ச்சியை ஊட்டின. அதன்‌ ஓட்டமும்‌, ஆட்டமும்‌ அவளுக்குப்‌ பெருங்‌களிப்பை யுண்டாக்கின. அதனுடைய மழலைப் பேச்சு அவள்‌ காதுகளுக்கு இனிய விருந்து. களங்கமற்ற அக்‌குழந்தையின்‌ இனிய முகம்‌, அவள்‌ கண்களுக்கு ஆனந்தக்‌ காட்சி. அந்தக்‌ குழந்தைதான்‌ அவளுக்கு நிறைந்த செல்வம்‌. அதற்குப்‌ பால்‌ ஊட்டுவதில்‌ பேரின்பம்‌. ௮க்‌குழந்தையை அவள்‌ கண்மணி போல்‌ கருதிச்‌ சீராட்டிப் பாராட்டி, நாளொரு மேனியும்‌, பொழுதொரு வண்ணமுமாக வளர்த்து வந்தாள்‌.

மற்றைக்‌ குழந்தைகளுடன்‌, தன்‌ குழந்தையையும்‌ விளையாட விட்டு மகிழ்வாள்‌. நாய்‌, பூனை, காக்கை, கோழி, குருவி, ௮ணில்‌ முதலியவற்றைக்‌ காட்டி, அதற்கு மகிழ்ச்சியூட்டுவாள்‌. வானத்தில்‌ நிலவைக்‌ காட்டி, அதை அழைக்கச்‌ சொல்வாள்‌. பாட்டுகள்‌ பாடித்‌ தூங்க வைப்பாள்‌. தலை நிறையப்‌ பூக்களைச்‌ சூட்டுவாள்‌. விளையாடுவதற்குப்‌ பொம்மைகளை வாங்கித்‌ தருவாள்‌. அக்குழந்தை அவளுக்கு உயிராக இருந்தது. முதற்‌ குழந்தை பெற்ற பெண்மணிகளுக்கு இஃது இயற்கைதானே!

வளர்பிறை போல வளர்ந்த ௮க்‌குழந்தைக்கு, ஒரு நாள்‌ நோய்‌ கண்டது. கெளதமை மனவருத்தம்‌