பக்கம்:இளைஞர்க்கான புத்தமதக் கதைகள்.pdf/18

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

3. வீட்டு நெருப்பை
அயலாருக்குக்‌ கொடுக்காதே

கோசல நாட்டின்‌ தலைநகரமான சிராவத்தி ந௧ரத்திலே மிகாரர்‌ என்னும்‌ செல்வச் சீமான்‌ ஒருவர்‌ இருந்தார்‌. இவருடைய மகன்‌ பெயர்‌ புண்ணியவர்த்தன குமாரன்‌. இவன்‌ காளைப்‌ பருவமடைந்து, திருமணம்‌ செய்வதற்கு உரிய நிலையை அடைந்தான்‌. ஆகவே, பெருஞ்‌ செல்வராகிய மிகாரர்‌ இவனுக்குத்‌ திருமணம்‌ செய்து வைக்க முனைந்தார்‌. முதலில்‌, புண்ணியவர்த்தன குமாரன்‌ தனக்குத்‌ திருமணம்‌ வேண்டாம்‌ என்று கூறினான்‌. இஃது எல்லா இளைஞர்‌களும்‌ வழக்கமாகக்‌ கூறுகிற வெற்றுப்‌ பேச்சு என்பதைச்‌ செல்வர்‌ அறிவார்‌. ஆகையினாலே, தம்‌ மகனுக்கு நெருங்கிய நண்பர்கள்‌ மூலமாக, அவன்‌ எப்படிப்பட்ட மங்கையை மணம்‌ செய்ய விரும்புகிறான்‌ என்பதை அறிந்து கொண்டார்‌. ஐந்து சிறப்புகளும்‌ ஒருங்கே அமையப் பெற்ற மங்கையைத்தான்‌ மணம்‌ செய்ய விரும்புவதாக அவன்‌ தெரிவித்தான்‌. ஐந்து சிறப்புகளாவன, மயிர்‌ அழகு, சதை அழகு, எலும்பழகு, தோல்‌ அழகு, இளமை ௮ழகு என்பன.

மயிர்‌ அழகு என்பது, மயில்‌ தோகை போன்று, அடர்ந்து, நீண்ட கூந்தலைப்‌ பெற்றிருத்தல். கூந்தலை அவிழ்த்து விட்டால்,‌ ௮து கணைக்கால்‌ வரையில்‌ நீண்டு தொங்குவதோடு, நுனியில்‌ மேற்புறமாகச்‌ சுருண்டிருக்க வேண்டும்‌. சதையழகு என்பது வாய்‌, இதழ்