பக்கம்:இளைஞர்க்கான புத்தமதக் கதைகள்.pdf/24

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

20

இளைஞர்க்கான புத்தமதக் கதைகள்

ஐம்பெருங்‌ குழுவினர்‌ வந்தார்கள்‌. அவர்களிடம்‌ மாமனார்‌, மருமகளின்‌ செய்தியை விளக்கமாகக்‌ கூறினார்‌. “ஒரு நல்ல நாளில்‌ நெய்ப் பொங்கலும்‌, பாயசமும்‌ சுடச்‌ சுடச்‌ சாப்பிடும் போது, பழைய சோறு சாப்பிடுகிறேன்‌ என்று சொல்லலாமா? அதுவும்‌ பிச்சைக்காரனிடத்திலா சொல்வது! நான்‌ என்ன பழைய சோறு சாப்பிடும்‌ பரம ஏழையா? இந்த நகரத்திலேயே முதல்‌ செல்வன்‌ நான்‌ அல்லனோ! இந்தப் பெண்‌ என்னை இப்படி இழிவுபடுத்துவதா? என்னை என்னவென்று நினைத்‌திருக்கிறாள்‌. மாமனார் என்று மதிப்பு இருந்தால்‌, இப்படிப்‌ பேசுவாளா? நீங்களே சொல்லுங்கள்‌. இனி, ஒரு கணமும்‌ இவள்‌ இங்கு இருக்கக் கூடாது” என்று சினத்தோடு பேசினார்‌.

“ஏன்‌, குழந்தாய்! நீ அப்படிச்‌ சொல்லலாமா? அது தவறுதானே!” என்று கேட்டார்கள்‌ ஐம்பெருங்‌ குழுவினர்கள்‌.

“நான்‌ அப்படித்தான்‌ சொன்னேன்‌. ஆனால்‌, அதற்கு அதுவா பொருள்‌?”

“பின்னை, என்னதான்‌ பொருள்‌!”

“மாமா பொங்கலும்‌, பாயசமும்‌ சுடச் சுடத்தான்‌ சாப்பிட்டுக்‌ கொண்டிருந்தார்‌. நான்தான்‌ விசிறிக் கொண்டிருந்தேன்‌. அப்போது ஒரு பிக்கு பிச்சைக்கு வந்தார்‌. மாமா அவரை கவனிக்கவில்லை. அவரும்‌ நெடுநேரம்‌ நின்றார்‌. அப்போது எனக்குள்‌ நான்‌ எண்ணினேன்; “முன் பிறப்பில்‌ மாமா, நல்ல பெரியவர்‌களுக்கு உடையும்‌, உணவும்‌ கொடுத்ததனால்,‌ அதன்‌ பயனாக, இப்போது செல்வராகப்‌ பிறந்து உண்ணவும்‌,