பக்கம்:இளைஞர்க்கான புத்தமதக் கதைகள்.pdf/54

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

8. மலையில்‌ உருண்ட பாறை

இராசகிருக நகரத்துக்கு அண்மையில்‌ குன்றுகளும்‌, காடுகளும்‌, தோட்டங்களும்‌, தோப்புகளும்‌ இருந்தன. ஆகவே, அவ்விடத்தில்‌ இயற்கை அழகும்,‌ இனிய காட்சிகளும்‌ நிறைந்திருந்தன. கழுக்குன்றம்‌ என்னும்‌ பொருள்‌ உள்ள கிச்சரகூட மலையும்‌, அதன் மேல்,‌ வெளு வனம்‌ என்னும்‌ மூங்கில்‌ காடும்‌ இருந்தன.

அந்தக் கிச்சரகூட மலையில்‌ இருந்த வெளு வனத்திலே, புத்தர்‌ பெருமான்‌ தமது புத்த சமயத்‌ துறவிகளுடன்‌ தங்கியிருந்தார்‌. அந்த மலைக்கு அண்மையில்‌, ஒரு பெரிய மாந்தோப்பு இருந்தது. முனிவர் மலை என்னும்‌ பொருள்‌ உள்ள இசிகிலி அல்லது இசிகிரி என்னும்‌ குன்று இன்னொரு புறம்‌ காட்சியளித்தது. சித்திரகூட பர்வதம்‌ என்னும்‌ குன்று மற்றொரு பக்கத்தில்‌ அமைந்திருந்தது. இம்‌மலையின்‌ மேல்‌ காளசிலை என்னும்‌ பெயருள்ள கரிய நிறமுள்ள பெரும்‌ பாறை பார்ப்பவர்‌ உள்ளத்திலே அச்சத்தையும்‌, வியப்பையும்‌ உண்டாக்கி, வீரத்தோடு நின்று 'கொண்டிருந்தது.

மற்றொரு பக்கம்‌ பண்டவ மலை இருந்தது. மத்‌தருச்சி என்னும்‌ இடமும்‌, மிருகதாய வனமும்‌ இங்கு இருந்த மனத்திற்கினிய காட்சிக்குகந்த இடங்கள்‌. மலைகளும்,‌ காடுகளும்‌, தோப்புகளும்‌, தோட்டங்களும்‌ சூழ்ந்திருந்த இந்த இடத்தில்,‌ இயற்கைக்‌ காட்சியின்‌ எழிலும்,‌ வளமும்‌ அமைந்திருந்தன. சூரியன்‌ மறைகிற