பக்கம்:இளைஞர் இஸ்லாமியக் கலைக்களஞ்சியம்.pdf/108

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9 8

பின்னர் அங்குள்ளோரிடையே தீனின் சிறப்பு, ஐவேளைத் தொழுகையின் முக்கியத்துவம் பெருமானாரின் பெரு வாழ்வு, நபித்தோழர்களின் நற்சிந்த னை ஆகியவை பற்றி எடுத்தோதுவர். இஃது தஃலிம் என அழைக்கப்படுகிறது.

தப்லீகின் மற்றொரு பகுதியினர் வாரத்தில் மூன்று நாட்கள் சிறு தொகையினராக சகோதரர்களை அணுகி தொழுகை யின் மகத்துவத்தை உணர்த்தித் தொழ அழைத்து வருவர். இச்செயல் 'கஷ்து' என்று அழைக்கப்படும்.

வாழும் முஸ்லிம்

இனி தப்லீக், ஜமாஅத்தாரால் 'இஜ் திமா மாநாடும் நடத்தப்படுகிறது.இது விரிவான முறையில் நடைபெறும் இஸ் லாமியப் பிரச்சார மாநாடாகும். இத்தகைய மாநாடு இரண்டு மூன்று நாட்கள் தொடர்ந்து நடைபெறும். நீண்ட தூரங்களிலிருந்தெல்லாம் மக் கள் மாநாட்டில் கலந்து தீனின் கொள் கைகளில் தெளிவு பெறுவர்.

இத்தகைய தப்லீக் பணிகளால் ஒவ் வொரு முஸ்லிமின் ஈமானும் பலப்படு கிறது. முஸ்லிம் அல்லாதவர்கள் இஸ் லாத்தின் சிறப்பை உணர்ந்து அதன் பால் இணைய வாய்ப்பேற்படுகிறது. இவ்வியக்கத்தில் முக்கிய பங்கேற் றிருந்த ஷைகுல் ஹதீஸ் மெளலானா ஜகரிய்யா (ரஹ்) பயனுள்ள பெரும் இஸ்லாமிய நூற்கள் பல இயற்றியுள்

GT了莒岛G*。

தமீம் அன்சாரி: பெருமானார் (ஸல்) மதீனாவிற்கு வந்த பிறகு,மதீனா நகர வாசிகளில் பலர் அவரது ஆதரவாளர் களாக அமைந்தனர். அவர்கள் அன் சாரிகள் என அழைக்கப்பட்டனர். அத் தகைய அன்சாரிகளில் ஒருவரே தமீம் அன்சாரி அவர்கள்.

அவர் இஸ்லாமியப் பிரச்சாரத்தின் பொருட்டு கப்பற்பயணம் மேற்கொண்

தமீம் அன்சாரி

டிருந்தார். அப்போது தமக்கு இறுதி நெருங்கிவிட்டதை உணர்ந்தார். தம் நண்பர்களை அழைத்துத் தம்மைப் பற் றிய விபரங்களை ஒருசெப்புத்தகட்டில் பொறித்து, தாம் இறந்தபின் தன் சட லத்துடன் அதைப் பெட்டியில்வைத்துக் கடலில் விட்டு விடும்படியும் இது யார் கையில் கிடைக்கிறதோ அங்கேயே அடக்கம் செய்துவிடுவார்கள் என்றும் கூறினார். அதன்படியே செய்யப்பட் டது. அவரது உடலத்தோடு கூடிய பெட்டி பலகாலம் கடலில் மிதந்தது. இறுதியாக கோவளம் கடற்கரையோர மாக வந்தது. முஸ்லிமல்லாத மீனவர் கள் அதை எடுக்க முயன்றபோது அவர் கள் கைக்குக் கிடைக்காமல் விலகிச் சென்றது. முஸ்லிம் மீனவர்கள் முயன்ற போது அவர்கள் கையில் அகப்பட்டது. திறந்து பார்த்து செப்புப் பட்டயம் மூலம் செய்தியறிந்த முஸ்லிம் மீனவர் கள் கடற்கரையிலேயே அவரது உடலை நல்லடக்கம் செய்தனர்.

அதன்பிறகு நீண்டகாலம் கழித்து, ஆற்காடு நவாப் நோயினால் கடுமை யாகப் பாதிக்கப்பட்டார். எவ்வளவோ மருத்துவம் செய்தும் நோய் குணமாக வில்லை. ஒரு நாள் கனவில் தமீம் அன் சாரி தோன்றி தம் கப்ர்மீது கட்டிடம் எழுப்புமாறு பணித்தார். நவாப் அவ் வாறே செய்ய, அவர் நோய் தீர்ந்தது. மகிழ்ச்சியடைந்த ஆற்காடு நவாப், மூன்று கிராமங்களை இத் தர்காவின் பராமரிப்புச் செலவுக்கென அளித்துள் этт гі.

இன்றும் ஜியாரத் செய்ய இத் தர்காவிற்கு மக்கள் திரளாக வந்து செல்கின்றனர். ஆண்டுதோறும் துல் ஹஜ் பிறை 16இல் உர்ஸ் வைபவம்நடை பெறுகிறது. இதில் உள்நாட்டிலிருந்து மட்டுமல்லாது இலங்கை, மலேசியா போன்ற வெளிநாடுகளிலிருந்தும் 'ஜியாரத் செய்ய வருகின்றனர்.