பக்கம்:இளைஞர் இஸ்லாமியக் கலைக்களஞ்சியம்.pdf/145

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முஹம்மது (ஸல்)

வயதுச் சிறுவராக இருந்தபோது, தாயார் ஆமீனாவும் மறைந்தார்.

அதன் பிறகு தம் பாட்டனார் அப்துல் முத்தலிபின் அரவணைப்பில் வளர்ந்து

வந்தார். அண்ணலார் எட்டு வயதை எட்டுமுன் பாட்டனாரும் காலமா

னார். அதன்பிறகு தம் பெரிய தந்தை அபூதாலிபால் வளர்க்கப்பட்டு, வாலிப நிலையடைந்தார்.

மேய்ப்பது முதல்

ஆடு ஒட்டகம் வணிகம்வரை பல தரப்பட்ட களைச் செய்தார். இளமை முதலே இனிய பழக்க வழக்கங்களின் இருப் பிடமாகத் திகழ்ந்தார். பெரியவர் களின் அன்பையும் மதிப்பையும் பெற் றார். எப்போதும் உண்மையே பேசி னார். நே ர்மையை எப்போதும் கடைப் பிடித்தார். இதனால், மற்றவர்களின் நம்பிக்கைக்குரியவராக விளங்கினார். எல்லோரும் அவரை அல் அமீன்' என்றே அழைத்தார்கள். இதற்கு 'நம்பிக்கைக்குரியவர்' என்று பொருள். ஏட்டுப்படிப்பு அறவே பெறாவிட்டா லும், அறிவுக்கூர்மை மிக்கவராக விளங் $ат тri.

ஒரு சமயம் குறைவுக் குலத்தினர் கஃபா இறை இல்லத்தைப் புதுப்பித் துக் கட்டி வந்தனர். அதில் முன்னரே 'ஹஜருல் அஸ்வத்' எனும் புனிதக் கருங் கல் இடம் பெற்றிருந்தது. இஃது சொர்க் கத்திலிருந்து வந்ததாகக் கருதப்படு கிறது. இதனை அதற்குரிய இடத்தில் எந்தக் குடும்பத்தினர் தூக்கி வைப்பது என்பதில் தகராறு ஏற்பட்டது. இவ் விஷயத்தில் தீர்வு காணும் பொறுப் பை, மறுநாள் அதிகாலை முதன்முத லாக கஃபாவுக்குள் யார் நுழைகிறா றோ அவரிடம் ஒப்படைப்பது என முடிவு செய்தனர். அதிகாலை முஹம் மது கஃபாவுக்குள் நுழைந்தார். அதைக்கண்டு எல்லோரும் மகிழ்ந்த

  1. 35

னர். முஹம்மதிடம் விஷயத்தைக் கூறி தீர்ப்பு வழங்குமாறு வேண்டினர். அதற் குச் சம்மதித்த முஹம்மது தம் மேல் துண்டை எடுத்து விரித்தார். அதன் நடுவில் கல்லைத் தூக்கி வைத்தார். அதன் நான்கு முலைகளையும், சச்சரவு செய்த நான்கு குடும்பத் தலைவர்கள் பிடித்துத் துக்கி வரும்படி கூறினார். அவர்களும் அவ்வாறே தூக்கிவர அதற் குரிய இடத்தில் நாயகம் அக்கல்லை எடுத்து வைத்தார். இதனால் எல் லோருக்குமே மகிழ்ச்சி ஏற்பட்டது. ஏற்படவிருந்த சச்சரவு தவிர்ககப்பட் டது. முஹம்மதுவின் அறிவுக் கூர்மை யை அனைவரும் பாராட்டினர்.

நேர்மையும் அறிவுத்திறனும் மிகுந்த வராக முஹம்மது விளங்கினார். அப் போது மக்கா நகரின் செல்வ வளம்

மிகுந்த வணிகப் பெண்மணியாக கதீஜா பெருமாட்டியார் விளங்கினார். அவர் தம் வணிகப் பிரதிநிதியாக

முஹம்மதை வெளிநாடுகளுக்கு அனுப் பினார். அவர் திறமையாகவும், நேர் மையாகவும் வணிகம் செய்து பெரும் இலாபத்துடன் திரும்பினார். அவரது நேர்மையும் ஒழுக்கமும், கதீஜா பிராட் டியைப் பெரிதும் கவர்ந்தன. விரைவில் முஹம்மதை மணந்து கொண்டார். அவர்களுக்குப் பாத்திமா எனும் பெண் குழந்தையும் பிறந்தது.

இல்லற வாழ்வில் இனிதே ஈடுபட் டிருந்த முஹம்மது முப்பத்தெட்டு

வயதை நெருங்கிக் கொண்டிருந்தார். தம்மைச் சுற்றி நாள்தோறும் நடை பெறும் மது சூது விபச்சாரம் போன்ற சமூக ஒழுக்கக்கேடான செயல்கள் அவரை அதிகம் வருத்தின. அறியாமை

யினாலும், முட நம்பிக்கையினாலும் இறைவன் .ெ ப ய ர | ல் அவர்கள் இழைத்துவரும் அநீதியான அனாச்

சாரச் செயல்கள் அவரைப் பெரிதும் சிந்திக்கத் தூண்டின.