பக்கம்:இளைஞர் தொலைக்காட்சி.pdf/83

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74 இளைஞர் தொலைக்காட்சி அது பெட்டியின் மின்னணுக்கற்றையையும் உறைப்புாக விழச் செய்கின்றது; ஆகவே, பெட்டி யின் திரையில் அது விழும் புள்ளி அதிகப் பிரகாச மாக உள்ளது. ஆனால், சிறிதளவு ஒளியோ அல்லது ஒளியே இல்லாமலோ இருப்பதனால் அடுத்த புள்ளி நிழல்போல் இருக்கின்றது. ஐகனுஸ்கோப் புத் திரையில் இப் புள்ளியிலிருந்து ஒருசில மின் னனுக்களே வெளிப்படுகின்றன. ஆகவே, மிகக் குறைவான அளவு மின்னேட்டமே நமது பெட்டி யின் மின்னணுக்கற்றைக்கு வருகின்றது; அதனல் அக்கற்றை உறைப்பின்றியுள்ளது. ஆகவே, நமது பெட்டித்திரையிலுள்ள அடுத்த புள்ளி கன்ருக ஒளிர்வதில்லை ; இருண்டு காணப்படுகின்றது. எனவே, ஐகனஸ்கோப்புத் திரையிலுள்ளஒளிமிக்க புள்ளியும், ஒளி குறைந்த (இருண்ட) புள்ளியும் அப்படியே நமது வீட்டுத் தொலைக்காட்சித் திரை யில் திரும்பவும் உண்டாக்கப்பெறுகின்றன. இவ் வாறே எல்லா ஒளிப்பகுதிகளும் இருட்பகுதிகளும் ஐகனஸ்கோப்புத் திரையைத் தாக்கினவுடனே (மறுகணமே) நமது பெட்டித் திரையில் திரும்ப வும் உண்டாகின்றன. அஃதாவது, ஐகனஸ்கோப் புத் திரையில் விழும் படம் முழுவதும் (எல்லாப் புள்ளிகளும்) அப்படியே நமது பெட்டித் திரை யில் காணப்பெறுகின்றது; எல்லாப் புள்ளிகளும் சேர்ந்து ஒரு படமாகத் தோற்றம் அளிக்கின்றன.