பக்கம்:இளைஞர் வானொலி.pdf/24

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

16

இளைஞர் வானொலி


செல்லும் ஆற்றலே” என்று எண்ணத் தோன்றுகின்றது. இல்லையா?


படம் 5. அறிஞர் அறையில் அறிவியல் நூலொன்றினைப் படித்துக் கொண்டிருக்கிறார்.

மின்னோட்டம் என்பது மின்னாற்றல் பாய்ந்து செல்வது என்று பொதுவாகச் சொல்லுவதைவிட இன்னும் நாம் வரையறைப்படுத்தித் திட்டமாகக் கூறலாம். ஒரு கம்பியில் மின்னோட்டம் நிலைபெறுங்கால் அக் கம்பியில் மின்னணுக்கள் (electrons) பாய்ந்து செல்லுகின்றன. மின்னணுக்கள் என்பவை அணுவின் துணுக்குகளில் ஒருவகை எதிர் மின்சாரத் தன்மையை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இளைஞர்_வானொலி.pdf/24&oldid=1394573" இலிருந்து மீள்விக்கப்பட்டது