பக்கம்:இளைஞர் வானொலி.pdf/42

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

34

இளைஞர் வானொலி


டத்தில் உண்டாகும் மிகச் சிறிய மாற்றங்களையும் உடனுக்குடன் பதிவுசெய்துவிடும் தன்மையது. இந்தக் காந்தம் எவ்வளவு விரைவாக செயற்படுகின்றது என்பதை உணர்வது மிகமிக முடியாத செயலாகும். எடுத்துக்காட்டாக, நாம் அதிலுள்ள மின்னோட்டத்தை ஒவ்வொரு வினாடியிலும் ஆயிரம் தடவை நீக்கியும் ஒடும்படியும் செய்தாலும், தேனிரும்பும் வினாடியொன்றுக்கு ஆயிரம் தடவை காந்தமாக இருந்து காந்தத்தை இழக்கும்!

இந்தப் புத்தகத்தின் ஏட்டின் அளவு மெல்லிய தேனிரும்புத் தகட்டை மேற்படி தேனிரும்புத் துண்டின் மிக அருகில் வைத்தால், காந்தத்தின் கம்பிச் சுருளில் உள்ள மின்னோட்டம் ஒடச் செய்வதற்கு ஏற்றவாறும், நிறுத்துவதற்கு ஏற்றவாறும் இத் தகடு காந்தத்தை நோக்கி இழுக்கப் பெறும்; அல்லது விடுவிக்கப்பெறும். அது மட்டுமா? இவ்வாறு இழுக்கப்பெறும் அளவும் மின்னோட்டத்தின் வன்மையில் ஏற்படும் மிகச் சிறிய மாற்றங்களுக்கேற்றவாறு மிகச்சரியாக அமையும். கம்பிச் சுருள்களில் மின்னோட்டம் எவ்வளவு வேகமாக மாறினாலும் சரி, ஒவ்வொரு வினாடியிலும் அஃது எத்தனை தடவை வன்மையிலிருந்து மென்மைக்குப் போய்க்கொண்டிருந்தாலும் சரி இரும்புத் தகடும் அவ்வளவுக்கவ்வளவு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இளைஞர்_வானொலி.pdf/42&oldid=1395412" இலிருந்து மீள்விக்கப்பட்டது