பக்கம்:இளைஞர் வானொலி.pdf/69

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

13. ஒத்த அதிர்ச்சி

ஒருவர் பேசும் பொழுது அவருடைய குரல் வளையிலுள்ள குரல் - நாண்கள் அதிர்கின்றன. இந்த அதிர்ச்சி நாலாபக்கங்களிலும் வேலைத் திறனைப் பரப்புகின்றது. பரவிய வேலைத்திறனும் நம்முடைய காதையடைந்து காதிலுள்ள செவிப்பறையைத் தாக்குகின்றது. தாக்கி அதனை அதிரவும் செய்கின்றது. பேசுபவர் வேலைத் திறனை வெளியிடுகின்றார்; கேட்பவர் அதனை ஏற்றுக் கொள்ளுகின்றார். அசைந்தாடி அதிரும் பொருள் ஒவ்வொன்றும் இவ்வாறு செய்ய வல்லது.

ஒரு மேசையின்மீது ஒரு பக்கத்தில் ஒரு கண்ணாடிக் கோப்பை உள்ளது. அதற்கு நேர் எதிர்ப்பக்கத்தில் அதே மாதிரியான மற்ருெரு கண்ணாடிக் கோப்பை உள்ளது. ஒரு பக்கத்துக் கோப்பையை ஒரு சிறிய கரண்டியைக் - கொண்டு தட்டினால், அதில் உண்டாகும் . சுருதியைப் போலவே


படம் 34. மேசையின்மீது
இரு கோப்பைகள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இளைஞர்_வானொலி.pdf/69&oldid=1396254" இலிருந்து மீள்விக்கப்பட்டது