பக்கம்:இளையர் அறிவியல் களஞ்சியம்.pdf/100

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

90

ஊற்று

உறிஞ்சுகிறது. இவ்வாறு தரை உறிஞ்சிய நீர் தரையினுள் சுவரி நிற்கும். மேலும், சுவர முடியாத கெட்டித் தரையோ அல்லது பாறையோ இருப்பின் தரையினுள் நீர் தேங்க நேரிடுகின்றது. இவ்வாறு தேங்கிய நீரின் மட்டம் உயரும் போது தாழ்ந்த தரைப்பகுதியை நோக்கிச் சென்று கசிகிறது. இதுவே நீருற்று ஆகும். இந்நீருற்று சிலவிடங்களில் கசிந்தோடும்; சில விடங்களில் நிலப்பரப்பின் மீது பீறிட்டு வரும்.

தரையினுள் தேங்கியிருக்கும் இயற்கை நீரூற்று

இத்தகைய இயற்கை ஊற்றுகள் கிணறுகளினுள்ளும் மலைச்சரிவுகளிலும், பள்ளத்தாக்குகளிலும் காணப்படும். இத்தகைய ஊற்றுக்கள்

பீறிட்டு வெளிப்படும் ஆர்ட்டீசியன் ஊற்று

பூமியின் வெப்பத்தன்மைகேற்ப ஊற்று நீரின் வெப்பநிலை அமையும்.

மழைநீர் தரையினுள் சுவரும்போது மண்ணில் கலந்துள்ள தாதுப் பொருட்களுடன் கலந்து கரைந்து தரையினுள் தங்க நேர்வதுண்டு. இத்தகைய தாதுக் கலப்புடன் வெளிப்படும் ஊற்று நீர் தாது ஊற்றுக்கள் (Mineral spring) என அழைக்கப்படுவதுண்டு. அவைகளில் உப்புநீர் ஊற்று கந்தக ஊற்று எனப் பலவகை ஊற்றுக்கள் உள்ளன. இவ்வூற்றுக்களில் குளிப்பவர்களின் நோய்கள் தீருவதுமுண்டு. பண்டைக்காலம் முதலே தோல் நோய், முடக்குவாத நோய் போன்றவைகளால் துன்புறும் நோயாளிகள் இத்தகைய தாதுஊற்றுக்களில் குளித்துத் தங்கள் நோய்களைப் போக்கிக் கொள்வது வழக்கமாகும் . தாதுஊற்றுக்கள் உலகெங்கும் உள்ளன.

தரையிலிருந்து பீறிட்டு வெளிவரும் ஒரு வகை ஊற்று உண்டு. இதை ‘ஆர்ட்டீசியன் ஊற்று’ (Artesian Well) srsr pl கூறுவர்.

தரையினுள் பாறைபோன்ற கடினப்பகுதிகளில் தேங்கி நிற்கும் நீரை தரையைத் துளையிட்டு பீறிட்டு வெளிவரும்படி செய்வது ஆர்ட்டீசியன் ஊற்று ஆகும். இயற்கையான நீர் அழுத்தத்தினால் நீர் வேகமாக மேல்நோக்கி பீறிட்டு எழுகிறது. இத்தகைய ஊற்றுக்களின் ஆழம் இடத்திற்கு இடம் வேறுபடும். சில மீட்டர் ஆழத்திலும் உண்டு. பலநூறு மீட்டர் ஆழத்திலிருந்தும் நீர் பீறிட்டு வெளி வருவதுண்டு,

இத்தகைய ஊற்றுக் கிணறு முதன் முதலில் ஃபிரான்ஸ் நாட்டில் ஆர்ட்டர்யிஸ் மாநிலத்தில் தோண்டப்பட்டது. அதன் பின்னர் இத்தகைய ஊற்றுக்கிணறுகளுக்கு அவ்வூர் பெயரின் சாயலிலேயே பெயரும் அமைவதாயிற்று.

மழைவளம் குறைந்த பகுதிகளில் இத்தகைய ஊற்றுக்கிணறுகள் பெரும் பயன் அளிப்பவையாக அமைகின்றன. இத்தகைய ஆர்ட்டிசியன் ஊற்றுக் கிணறுகள் அமெரிக்கப் புல்வெளிப் பகுதிகளிலும் இந்தியா, ஆஸ்திரேலியா, குவின்ஸ்லாந்து போன்ற நாடுகளில் வேளாண்மைக்கும் குடிநீருக்கும் பயன்படுகின்றது. தமிழ்நாட்டில் தென்னாற்காடு மாவட்