பக்கம்:இளையர் அறிவியல் களஞ்சியம்.pdf/113

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஐன்ஸ்டீன், ஆல்பெர்ட்

103

சூரிய இயக்க முறைகளையும் அதன் ஈர்ப்பாற்றலையும் கண்டறிந்தார். அதன் விளைவாக அவர் உருவாக்கிய அறிவியல் தத்துவங்களே இயக்கவியல் நிலையியல் கோட்பாடுகள். இவையே 'நியூட்டன் இயக்கவிதிகள்’ என அழைக்கப்படுகிறது.

வானவியலுக்கு அடிப்படையான கணித வியலிலும் பல புதிய கண்டுபிடிப்புகளைக் கண்டறிந்து உலகுக்குக் கூறியவர் ஐசக் நியூட்டன். இவர் ஒளியைப் பற்றியும் நிறங்

ஐசக் நியூட்டன்

களைப் பற்றியும் பல அரிய உண்மைகளை ஆராய்ந்து கண்டறிந்தார். நாம் சாதாரணமாகக் காணும் வெண்மை நிறத்தில் சிவப்பு, மஞ்சள், பச்சை, ஊதா, கருமை, நீலம் ஆகிய ஏழு வண்ணங்கள் கலந்த கலவையே என்பதைக் கண்டறிந்து உலகுக்குக் கூறினார்.

அவர் காலத்திற்கு முன்பு கண்டுபிடிக்கப்பட்டிருந்த தொலை நோக்காடியை மேலும் முனைப்பாக ஆய்ந்து 'பிரதிபலிப்புத் தொலை நோக்காடியைக் கண்டுபிடித்தார். இதுவே வானவியல் ஆய்வு வளர்ச்சிக்கு மாபெரும் உந்து சக்தியாக அமைந்தது.

இவரது அரிய கண்டுபிடிப்புகளைப் பாராட்டிய ஆங்கில அரசு 1705ஆம் ஆண்டில், இவருக்கு ‘சர்’ பட்டம் வழங்கிப் பாராட்டியது. இவரது ஆய்வும் கண்டுபிடிப்புமே இன்றைய வானவியல் ஆய்வுக்கு அடிப்படையாக அமைவதாயிற்று.

ஐன்ஸ்டீன், ஆல்பெர்ட் : இயற்பியல் துறையின் வேகமான வளர்ச்சிக்குப் பெருந்துணையாயிருந்தவர் ஆல்பெர்ட் ஐன்ஸ்டீனே ஆவார். ஒப்பற்ற கணித மேதையாகத் திகழ்ந்த ஐன்ஸ்டீன் ஜெர்மனியில் உள்ள உல்ம் எனுமிடத்தில் பிறந்தவர். ஜெர்மனியில் உள்ள முனீக்கிலும் பின்னர் சுவிட்சர்லாந்திலும் உயர் கல்வி கற்று மாபெரும் விஞ்ஞான மேதையாக மலர்ந்தார்.

கணிதவியலைத் தவிர்த்து வேறு துறைப் பாடங்களில் அதிக ஆர்வம் காட்டாத ஐன்ஸ்டீன் கணிதவியல் அடிப்படையில் இயற்பியல் ஆய்வுகளில் பேரார்வம் காட்டினார். இவரது ஆய்வுக் கட்டுகரைகள் விஞ்ஞானிகளின் கவனத்தை ஈர்த்தன. இவரது ஆய்வுத் திரட்சியாக சார்பியல் கொள்கை (Theory of relativity)யை வகுத்து உலகுக்கு வழங்கினார். 1919ஆம் ஆண்டில் வெளியிட்ட இக்கொள்கை இயற்பியல் துறை விஞ்ஞானிகளிடையே மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியது. அறிவியல் உலகம் இவரது 'சார்புக் கொள்கை'யை ஏற்றிப் போற்றிப் பாராட்டியது.

ஒரு பொருளின் எடைக்கும் அப்பொருள் தரும் ஆற்றலுக்குமிடையிலான தொடர்பை விவரிப்பதே சார்புக் கொள்கையாகும். இக் கொள்கையை அடியொற்றியே அணுகுண்டு உருவாக்கப்பட்டது.

சாதாரணமாக இவரது சார்புக் கொள்கைகளை இருவகையினவாக விஞ்ஞானிகள் பிரித்துக் கூறுவர். ஒன்று சிறப்புச் சார்புக் கொள்கை (Special Theory of Relativity). இது 1905 வரையிலான ஆய்வை அடிப்படையாகக் கொண்டது. மற்றொன்று பொதுச் சார்புக் கொள்கை (General Theory of Relativity). இது 1915ஆம் ஆண்டில் வகுத்தமைக்கப்பட்டது. இந்த இரண்டாவது கொள்கையை ஐன்ஸ்டீனின் “ஈர்ப்பு விதி“ (Law of Gtavita. tion) என்று அழைப்பர்.

மேற்கூறிய ‘சார்புக் கொள்கை'களுக்காகப் போற்றப்பட்டாலும் இவர் வேறுசில கண்டுபிடிப்புகளையும் உலகுக்கு வழங்கியுள்ளார். அவற்றுள் குறிப்பிடக்தக்க ஒன்று 'ஒளியின் வளைவு’ (Photo Electric effect) என்பதாகும். இக்கண்டுபிடிப்புக்காகவே இவருக்கு இயற்பியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.

ஜெர்மனியில் உள்ள இயற்பியல் ஆய்வுக் கூடத்தலைவராக விளங்கிய இவர் இரண்டாம்