பக்கம்:இளையர் அறிவியல் களஞ்சியம்.pdf/137

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

காலிலியோ

127

காளை மாடுகள் உழவுக்கும் வண்டியிழுக்கவும் பயன்படுத்தப்படுகின்றன. இவைகள் இறைச்சிக்காகவும் பயன்படுத்தப்படுகின்றன. இதேபோன்று ஆடுகள் உரோமத்திற்காகவும் இறைச்சிக்காகவும் வளர்க்கப்படுகின்றன. வெள்ளாடுகளிடமிருந்து பாலும் கிடைக்கிறது. கால்நடைகளின் கழிவுகள் நல்ல உரங்களாக அமைகின்றன. கால்நடைகள் இறந்த பின்னர் அவற்றின் தோல்களும் கொம்புகளும் எலும்புகளும் கூட பல்வேறு வகைகளில் பயன்தரும் பொருட்களாக விளங்குகின்றன. தோல் தொழில் வளர்ச்சிக்கு கால்நடைகளே ஆதாரமாக அமைகின்றன. எனவே, நாட்டின் இன்றியமையாச் செல்வங்களாகக் கால்நடைகள் போற்றப்படுகின்றன. 'மாடு' என்ற தமிழ்ச்சொல் 'செல்வம்’ எனும் பொருளிலேயே வழங்கப்படுகின்றது.

நம்மைப் போலவே கால்நடைகளும் அடிக்கடி நோயால் பீடிக்கப்படுவதுண்டு. அவற்றிற்கு மருத்துவம் செய்வதற்கென தனி மருத்துவமனை உண்டு. அதுவே கால்நடை மருத்துவமனை, கால்நடை மருத்துவர்கள் கால்நடை மருத்துவக் கல்லூரிகளில் கற்றுத் தேறியவர்கள். நோய்களைத் தீர்ப்பதற்கு மட்டுமின்றி நல்ல முறையில் கால்நடைகளைப் பராமரித்து வளர்ப்பதற்கான தனிப்பயிற்சியும் கால்நடை மருத்துவக் கல்லூரிகளில் அளிக்கப்படுகிறது.


காலரா : வாந்தி பேதி என அழைக்கப்படும் காலரா உயிருக்கு ஆபத்து உண்டாக்கும் கொடிய நோய்களுள் ஒன்றாகும். 'லிப்ரியோ காலரே' என்ற பாக்டீரியா கிருமிகளால் உண்டாகிறது. இக்கிருமிகள் கண்களுக்குப் புலப்படாத நுண்ணுயிர்களாகும்.

காலராக் கிருமிகள் பெரும்பாலும் நீர் மூலமே பரவுகின்றன. அவை உடலுள் சென்றவுடன் விரைந்து பெருக்கமடைகின்றன. இக்கிருமிகள் உடலில் புகுந்த ஐந்தாவது நாள் நோய் அறிகுறிகள் வெளிப்படத் துவங்கும். வாந்தியும் பேதியும் தொடர்ந்து ஏற்படும். இதனால் உடலில் நீர் குறைந்து போகும். இதனால் கடுமையான தாகமும் நாவறட்சியும் ஏற்படும். உடல் வெப்பம் குறைய உடல் குளிரத்தொடங்கும். கைகால் வலி ஏற்படும். மூச்சு இறைக்கும். நாடித்துடிப்பு குறைந்து கொண்டே வரும். உடலில் நீர் குறைந்துவிட்ட காரணத்தால் சிறுநீர் கழியாது. நேரம் ஆகஆக இதயத் துடிப்பு குறைந்து கொண்டே வந்து இறுதியில் நின்று மரணத்தை ஏற்படுத்தும். எனவே, இந்நோய் கண்டவுடன் அல்லது நோய்க்கான அறிகுறி தென்பட்டவுடனே உரிய மருத்துவம் செய்து கொண்டால் பிழைத்துக் கொள்ளலாம்.

முன்னெச்சரிக்கையுடன் இருந்தால் இந்நோய் வராமலேயே தவிர்க்க முடியும். எப்போதும் நன்கு காய்ச்சி ஆறிய நீரையே பருக வேண்டும். நாம் உண்ணும் உணவு சூடாக இருக்க வேண்டும். ஈ மொய்க்கும் தின்பண்டங்களை உண்ணவே கூடாது. நாம் வாழும் சுற்றுப்புறங்களைத் தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும். எல்லாவற்றுக்கும் மேலாக மூன்று மாதங்களுக்கு ஒருமுறை காலரா நோய்த் தடுப்பூசியைப் போட்டுக் கொள்ள வேண்டும்.

உலகிலேயே காலரா நோய் இந்தியா போன்ற வெப்ப நாடுகளில் அதிகமாக உள்ளது. எனினும் கடுமையான மருத்துவமுறைகளினாலும் வசதிகளாலும் இந்நோய்ப் பரவுதல் குறைந்து கொண்டே வருகிறது.


காலீலியோ : இன்றைய வானவியல் அறிஞர்களுக்கெல்லாம் முன்னோடியாக வாழ்ந்தவர் இவ்வானவியல் மேதை. இத்தாலியில் உள்ள பீசா எனும் நகரில் எளிய குடும்ப மொன்றில்1564இல் பிறந்தார்.இவர் இளைஞராக இருந்தபோது இவர் ஒரு மருத்துவ வல்லுநராக

காலீலியோ

ஆக வேண்டுமென இவரது தந்தை பெரிதும் விரும்பினார். ஆனால் இவருக்கோ கணிதமும்