பக்கம்:இளையர் அறிவியல் களஞ்சியம்.pdf/140

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

130

காற்றாலை

வால்வு இருக்கும். அது குழாயில் உள்ள காற்றை எதனுள் செலுத்துகிறோமோ அதனுள் புகவிடும். ஆனால் அதே காற்றை மீண்டும் வந்த வழியே வெளிச்செல்ல விடாது.

அடிப்பாகத்தின் மூலம் காற்றைச் செலுத்தி விட்டு மீண்டும் பிஸ்டனை மேலே தூக்கினால் காற்றுக் குறைந்த குழாயின் உட்பகுதியை நோக்கி வெளிக்காற்று வால்வின் வழியே உட் சென்று நிரம்பும். மீண்டும் பிஸ்டனை கீழ் நோக்கி அழுத்தினால் குழாயில் உள்ள காற்று கீழேயுள்ள வால்வைத் திறந்துகொண்டு எதனுள் காற்றைச் செலுத்துகிறோமோ அதனுள் சென்று நிரம்பும்.

பெரிய அளவிலான காற்றழுத்திப் பம்ப்புகளும் உண்டு.


காற்றாலை : காகிதத்தால் அல்லது பனை ஓலையால் குறுக்கும் நெடுக்குமாகச் செய்யப்பட்ட சிறிய காற்றாடிகளைப் பார்த்திருக்கலாம். அதை காற்றடிக்கும் திசைக்கு நேராகக்

காற்றாலை

காட்டினால் விரைந்து சுற்றும். காற்றின் வேகத்திற்கேற்ப காற்றாடி சுழலும். இதே போன்று அமைக்கப்படுவதுதான் காற்றாலைகள். இதில் உள்ள காற்றாடிகள் மிகப் பெரியவையாக இருக்கும்.

காற்றாலைகளுக்குப் புகழ்பெற்ற நாடு நெதர்லாந்து ஆகும். இந்நாட்டின் பெரும்பகுதி கடல் மட்டத்திற்குக் கீழாக அமைந்திருப்பதால்

மின்உற்பத்தி செய்யும் நவீன காற்றாடி

கடல்நீர் பள்ளமான தரைப்பகுதியை நோக்கி வருவது தவிர்க்க முடியாததாகிறது. இவ்வாறு வரும் கடல்நீரை இடைவிடாமல் இறைப்பதற்கென நெடுங்காலத்திற்கு முன்பாகவே இத்தகைய பெரிய பெரிய காற்றாலைகளை அமைத்துள்ளார்கள்.

காற்றாலைகளில் விசிறி வடிவில் உள்ள காற்றாடிகள் உயரமான தூணின் முகப்பில் அமைக்கப்பட்டிருக்கும். காற்றாடி ஒரு சக்கரத் துடன் இணைக்கப்பட்டிருக்கும். அச்சக்கரம் தூணின் அடிப்பாகத்தில் உள்ள எந்திரத்துடன் இணைக்கப்பட்டிருக்கும். காற்றினால் காற்றாடி சுழலும்போது சக்கரமும் அதனுடன் இணைந்துள்ள எந்திரமும் இயங்கும். அப்போது எந்திரம் நீரை இறைக்கும். நீர் இறைக்க வேண்டிய அவசியமில்லாதபோது காற்றாடியால் இயங்கும் எந்திரத்தைக் கொண்டு மாவு அரைக்கப்படுகிறது.