பக்கம்:இளையர் அறிவியல் களஞ்சியம்.pdf/149

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

குடல்வால் அழற்சி

139

வழியாகவே வெளியேறுகின்றன. குடல் இரைப்பையின் அடிப்பகுதியிலிருந்து மலவாய் வரை நீண்டுள்ளது. குடலின் தொடக்கப் பகுதி குடல்வாய் என்று அழைக்கப்படுகிறது. குடலின் இறுதிப் பகுதியில் மலவாய் அமைந்துள்ளது. குடலை சிறுகுடல், பெருங்குடல் என இரு பெரும் பிரிவுகளாகப் பிரிப்பர்.

குழாய் வடிவில் அமைந்துள்ள சிறு குடலின் உட்பகுதி குறுகிய இடைவெளியையும் பெருங்குடலின் உட்பகுதி சற்று அதிக இடைவெளியையும் கொண்டுள்ளன.

சிறு குடல் குடல்வாய் தொடங்கி பெருங்குடல்வரை நீண்டுள்ளது. இதன் மொத்த நீளம் 22 அடி முதல் 25 அடிவரை இருக்கும். இது நம் வயிற்றின் நடுவில் அடிப்பகுதியில் அமைந்துள்ளது. இதைச் சூழ்ந்து பெருங்குடல் உள்ளது.

சிறுகுடல் மூன்று பெரும் பிரிவுகளை உடையது. முதல் பகுதி கீழ்ச்சிறுகுடல் ஆகும். லாடம்போல் அமைந்துள்ள முன்சிறுகுடலே அகலமான பகுதியாகும். கணையம் எனும் சுரப்பி இப்பகுதியிலேயே அமைந்துள்ளது. இதன் நடுப்பகுதியிலேயே கணைய நீரும் பித்த நீரும் கலக்கின்றன.

இடைச் சிறுகுடலும் கீழ்ச்சிறு குடலும் சுருங்கிய வடிவில் சுருண்டு இருக்கும். அதிலும் கீழ்ச்சிறுகுடல் மிகவும் சுருண்டிருக்கும். சுமார் 6 அடி நீளமுள்ள பெருங்குடலோடு கீழ்ச்சிறுகுடல் இணையுமிடத்தில் ஒரு சிறு வால்வு உண்டு. அப்பகுதி பெருங் குடல்வாய் ஆகும். சிறு குடலும் பெருங்குடலும் சேருமிடத் திற்குக் கீழாக 'குடல்வால்' அமைந்துள்ளது.

சத்துருஞ்சி

பெருங்குடல் சுமார் ஒன்றரை மீட்டர் நீளமிருக்கும். இஃது ஏறுகுடல், குறுக்குக் குடல், இறங்கு குடல், மடிப்புக் குடல் எனும் நான்கு பகுதிகளைக் கொண்டுள்ளது. பெருங்குடலின் இறுதிப்பகுதி மலவாய் ஆகும். இதன்மூலமே கழிவுப் பொருளான மலம் வெளியேற்றப்படுகிறது.

வாயில் தொடங்கும் சீரணப் பணி சிறுகுடலில் முடிவடைகிறது. சிறுகுடலில் அமைந்துள்ள குடற் சுவர்களில் சுரக்கும் என்ஸைம்களும் சிறுகுடலுக்குவரும் கணைய நீரும் பித்த நீரும் உணவை சீரணமாக்கப் பெரிதும் உதவுகின்றன. சிரணமாகும் உணவை சிறுகுடலோடு அவற்றின் சுவர்களில் நுண்ணிய விரல்கள்போல் நீட்டிக் கொண்டிருக்கும் 'குடல் உறிஞ்சிகள்' ஈர்த்து தந்துகிகளுக்கு அளிக்க, அஃது பாற்குழல்கள் மூலம் இரத்தத்தில் கலக்கின்றன.

சீரணமாகாத கழிவுப் பொருட்கள் சிறுகுடலிலிருந்து பெருங்குடலுக்கு வருகின்றன. பெருங்குடல் உடலுக்கு வேண்டிய அளவு நீரை கழிவுப்பொருளிலிருந்து உறிஞ்சியபின் மலவாய் வழியாக வெளியேற்றப்பட்டு விடுகிறது. பெருங்குடலில் சிறுகுடற் சுவர்களில் உள்ளது போல் உறிஞ்சிகளோ குடற்பால் குழல்களோ இல்லை.


குடல்வால் அழற்சி : சிறு குடலும் பெருங்குடலும் இணையுமிடத்தில் குடல்வால் (Appendix) என்ற பகுதி அமைந்திருப்பதை நாம் அறிவோம். இது ஒரு மெல்லிய குழாயாகும். இது அரை சென்டிமீட்டர் விட்டமும் பத்து சென்டிமீட்டர் நீளமும் கொண்டது. உடலின் பிற உறுப்புகள் ஏதாவது ஒரு பணியைச் செய்கிறது. ஆனால், குடல்வால் எவ்வித வேலையும் செய்வதில்லை. எனவே, நமக்கு எந்தவிதப் பயனும் குடல்வாலால் ஏற்படுவதில்லை.

குடல்வால் தொங்கும் நிலையில் அமைந் திருப்பதால் அதில் பிற பொருள்கள் எளிதில் சென்று தங்க நேரிடுகிறது. இதனால் பாக்டீரியாக்கள் பெருகி அழற்சியை ஏற்படுத்துகிறது. இங்கு தங்கும் மலம் மேலும் மேலும் அழுக்குப் படிய இறுகிக் கெட்டியாகிறது. இஃது அழற்சி நோய், வயிற்று வலியை உண்டாக்கும். இவ்வழற்சி

குடல் வால்

வழற்சி நோய் பிற பகுதிகளுக்கும் பரவ நேரின் வேறு சில உடற்கேடுகள் உண்டாக