பக்கம்:இளையர் அறிவியல் களஞ்சியம்.pdf/162

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

152

சார்புக் கொள்கை

மிகுந்த கடினத்தன்மை கொண்ட வைரத்துக்கான மாற்றுப் பொருளைக் கண்டுபிடிக்க முனைந்தார். அதன் பயனாக உருவானது தான் சாணைக்கல். அதிக அளவு வெப்பம் தாங்கும் சக்தி படைத்ததனால் இஃது ஏவுகணை, ராக்கெட் போன்றவற்றில் வெப்பம் தாங்கும் பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது. இதனைத் தூளாக்கித் துணியிலும் தாளிலும் ஒட்டிக் கடினப் பொருட்களைத் தேய்க்க (உப்புக் காகிதம் போல)ப் பயன்படுத்துகிறார்கள்,


சாயம் : பல்வேறு இழைகளுக்கு வண்ணமூட்டும் பொருட்கள் பொதுவாக சாயங்கள் என அழைக்கப்படுகின்றன. ஒரு சாயப் பொருளுக்கு மூன்று முக்கிய குணங்கள் இருக்க வேண்டும்.

(1) தகுந்த நிறத்தை பெற்றிருக்க வேண்டும். (2) கரைசலில் இருந்து பொருளின் மேல் சேர்ந்திருக்கும் பொருளின் பண்பினைப் பெற்றிருக்கவேண்டும். (8) நீர், அமிலங்கள் மற்றும் காரங்களுடன் வினைபுரியும் தன்மை இருக்கக்கூடாது.

பொதுவாக, செயற்கையாக நிறம் தரும் சாயப்பொருட்களில் நிறத்தைத் தரும் தொகுதிகள் குரோமோபோர் (Chromophere) என்று அழைக்கப்படுகின்றன. எனவே நிறத்தைத் தரும் தொகுதியை பெற்றிருக்கும் சேர்மங்கள் குரோமோஜன்கள் (Chromogens) என்று அழைக்கப்படுகின்றன. குரோமோஜன்களில் காணும் குரோமோபோர்களின் எண்ணிக்கை அதிகரிக்க அதிகரிக்க நிறத்தின் அடர்த்தி அதிகரிக்கும். இவ்வாறு நிறத்தின் அடர்த்தியை அதிகரிக்கும் தொகுதிகள் ஆக்ஸோ குரோம்கள் (auxochromes) என அழைக்கப்படுகின்றன. துணிமணிகளுக்கோ பிறபொருட்களுக்கோ சாயமேற்றிப் பயன்படுத்தும் வழக்கம் பண்டுதொட்டே இருந்து வந்துள்ளது. பொருட்களுக்கு அழகூட்டி, வெயில், காற்று, பனி முதலானவைகளிலிருந்து ஓரளவு காப்பு தருவதாகச் சாயம் அமைந்துள்ளது. முற்காலத்தில் தாவரங்களிலிருந்தும் பூக்களிலிருந்தும் பழங்கள், மரப்பட்டைகள், இவைகளிலிருந்தும் சாயம் தயாரித்து வந்தனர். அவுரி எனும் தாவரம் நீலச்சாயம் தயாரிக்கப் பெரிதும் பயன்படுத்தப்பட்டு வந்தது. செயற்கைச் சாயப் பொருட்கள் கண்டுபிடிக்கப்படும்வரை இது வெளிநாடுகளுக்கு இந்தியாவிலிருந்து பெருமளவில் ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தது.

இந்நூற்றாண்டின் ஆரம்பத்திலிருந்து செயற்கைச் சாயங்கள் வேதியியல் முறையில் தயாரிக்கப்பட்டன. இதனைத் தொடங்கி வைத்த நாடு ஜெர்மனியாகும். இன்று உலகிலுள்ள எல்லா நாடுகளுமே செயற்கைச் சாயங்களை வேண்டிய வண்ணத்தில் விரும்பும் அளவுக்கு உற்பத்தி செய்ய முடிகிறது. இச்சாயங்கள் இன்று துணி, தோல், தாள், பிலிம், மருந்து போன்றவற்றிற்கு மட்டுமல்லாது உணவுப் பொருட்களிலும் பெருமளவில் பயன்படுத்தப்படுகின்றன.

இயற்கையாகக் கிடைத்து வந்த சாயங்களை விட செயற்கைச் சாயத்தை எளிதாகத் தயாரிக்க முடிகிறது. தயாரிப்புச் செலவு மிகவும் குறைவு; விரும்பும் வண்ணத்தை எளிதில் பெற இயலுகிறது. இதனால் இயற்கைச் சாயம் தயாரிப்புத்தொழில் மறைய செயற்கைச் சாயத் தயாரிப்புத் தொழில் செழுமையடைந்துள்ளது.


சார்புக் கொள்கை : உலகப் புகழ்பெற்ற இயற்பியல் விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் கண்டுபிடித்ததே ‘சார்புக் கொள்கை' (Theory of Relativity) என்பதாகும். ஒரு பொருளின் எடைக்கும், அப்பொருளிலிருந்து பெறப்படும் சக்திக்கும் உள்ள தொடர்பை விளக்குவதே சார்புக் கொள்கையர்கும். இதை 1916ஆம் ஆண்டில் கண்டறிந்து கூறினார். இந்தப் புதிய கொள்கையை இவர் வெளியிட்டபோது இதை நன்கு புரிந்து விளக்கும் ஆற்றல் படைத்தவர்கள் பத்துப் பன்னிரண்டு பேரே உலக முழுவதிலும் இருந்தனர். அந்த அளவுக்குப் புரிந்துகொள்ள கடினமான கோட்பாடாகும் சார்புக் கொள்கை, இக் கண்டுபிடிப்புக்காக இவருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது.

இயக்கங்கள் அனைத்துமே "சார்புத் தன்மை"யுடையவை என்பதை ஒவ்வொருவரும் தம் அனுபவத்தின் வாயிலாக அறிய முடியும். உதாரணமாக “நீங்கள் ஓரிடத்தில் நின்று கொண்டிருக்கும்போது ஓர் இரயில் உங்களைத் தாண்டிக் கொண்டு மணிக்கு 20 கி.மீ. வேகத்தில் ஓடுகிறது என்று வைத்துக் கொள்வோம். இரயிலில் செல்லும் ஓர் ஆள் இரயில் போகும் திசையில் ஒரு பந்தை மணிக்கு 20 கி.மீ. வேகத்தில் செல்லும்படியாக வீசி எறிகிறார் என்றால், இரயிலில் போகும் அந்த ஆளுக்கு அப்பந்து இரயிலை விட்டு வெளிச் செல்லும்