பக்கம்:இளையர் அறிவியல் களஞ்சியம்.pdf/173

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

செல்லுலோஸ்

163

தில்லை, எதனாலும் எளிதில் அரிக்கப்படுவதில்லை. ஆனால், ஈரக் காற்றிலிருக்கும்போது இதன்மேல் ஒருவிதக் கரும்பச்சைக் களிம்புபடியும். இக்களிம்பு நச்சுத் தன்மையுடையதாகும். செம்பைத் தகடாகவோ கம்பிகளாக வோ உருமாற்றுதல் எளிது.

அன்றாட வாழ்வில் பல்வேறு பணிகளுக்குச் செம்பைப் பயன்படுத்தி வருகிறோம். மின்சாரத்தை அனுப்பும் மின் கம்பியாக அதிக அளவில் பயன்பட்டு வருகிறது. செப்புத் தகட்டில் செதுக்குருவங்களை உருவாக்குவதோ எழுத்துக்களால் பொறிப்பதோ எளிது. நீண்டகாலம் அவை நிலைபெற்றிருப்பதால் பண்டைக் கால மன்னர்கள் அரசு ஆணைகளையும் முத்திரைக் குறிப்புகளையும் செப்பேட்டிலேயே செதுக்கி வந்தார்கள். செம்போடு துத்தநாக உலோகத்தைக் கலந்து பித்தளை உலோகம் செய்கிறார்கள், செம்போடு வுெள்ளியத்தைக் கலப்பதன் மூலம் வெண்கல உலோகம் கிடைக்கிறது. இதனால் சிலைகளும் கோயில் மணி போன்றவைகளும் உருவாக்கப்படுகின்றன. நாணயம் செய்ய செம்பு பயன்படுத்தப்படுவது போன்றே, உறுதிக்காக வேண்டி தங்கம். வெள்ளியோடு சிறிதளவு செம்பு சேர்த்து நகைகள் செய்யப்படுகின்றன.


செய்தித் தொடர்பு : மனிதன் என்று தன் உணர்வையும் கருத்தையும் பிறருக்கு உணர்த்த விழைந்தானோ அன்று முதல் செய்தித் தொடர்பு முயற்சியும் தொடர்ந்து கொண்டேயிருக்கிறது.

பண்டைக் காலத்தில் சமிஞ்கை மூலமும் குரலொலி மூலமும் செய்திப் பரிமாற்றம் செய்து வந்தனர். பின்னர் குறியீடுகள் மூலமும் படங்களை வரைந்து காட்டுவதன் மூலமும் செய்திக்கான கருத்தை வெளிப்படுத்தலாயினர். சற்று தூரத்தில் மனிதர்களுக்கும் குழுக்களுக்கும் முரசு அடித்து ஒலி எழுப்பியும் கண்ணாடி மூலம் கதிரவன் ஒளியைப் பிரதிபலித்தும் சில சமயம் சருகுகளைக் கொண்டு நெருப்பூட்டி புகை எழும்பச் செய்தும் செய்திகளைப் பரிமாறிக் கொண்டார்கள்.

அதன்பின், நாகரிக வளர்ச்சியின் விளைவாக நெடுந்தூரத்தில் உள்ளவர்கள் ஆள் மூலம் செய்தி அனுப்பியும் குதிரைக்காரர்கள் மூலம் செய்தி அனுப்பியும் வந்தனர். அதன்பின் நன்கு பழக்கப்பட்ட புறாக்களின் கால்களில் செய்திகளைக் கட்டி பறக்கவிட்டு செய்தி அனுப்பினர்.

இன்று அறிவியல் பெரு வளர்ச்சியின் விளைவால் தபால் அனுப்பும்முறை செயல்பாட்டிற்கு வந்து நிலைபெற்றுள்ளது. இத் தபால்கள் ரயில் மூலமும், கப்பல் மூலமும், விமானம் வாயிலாகவும் அனுப்பப்படுகிறது. இவைகள் மூலம் அனுப்புவதைவிட விரைந்து செய்திகளை அனுப்ப தந்தி முறையும் தொலைபேசி மூலம் செய்தி தரும் முறையும் பயன்பாட்டில் உள்ளன. வானொலி வாயிலாகவும் தொலைக் காட்சி மூலமும் உலகின் மூலை முடுக்கெங்கும் வாழும் மக்கள் கண்ணிமைக்கும் நேரத்தில் செய்திகளை நேரிடையாக கேட்டறியவும் கண்களால் பார்த்து மகிழவும் ஏதுவாகியுள்ளது. செய்திகளை விரைந்து பரப்புவதில் செயற்கைக் கோள்கள் இன்று பெரும்பங்கு வகிக்கின்றன. செய்தித் தாள்களின் பங்கும் பணியும் செய்தித் தொடர்பில் அளவிடற்கரியதாகும்.

இத்தகைய நவீன செய்தித் தொடர்புச் சாதனங்களால் உலக மக்களிடையே மிகுந்த நெருக்கம் ஏற்பட்டுள்ளது. உலகமும் பெருமளவில் குறுகிவிட்டது என்றே சொல்லலாம்.


செல்லுலோஸ் : இதுவும் ஒரு கார்போஹைட்ரேட் என்னும் கரிமச் சேர்ம வகையைச் சேர்ந்தது. 100இல் இருந்து 800 குளுகோஸ் மூலக்கூறுகள் இணைந்து நீண்ட சங்கிலித் தொடராகி செல்லுலோஸாக உருவாகிறது. தாவர செல் சுவர்கள் இச்சேர்மத்தால் ஆனது. இது ஒரு உயிரியல் பல்படிச் சேர்மமாகும்.

செல்லுலோஸ் ஒருவகை மரப்பொருளாகும். இது தரவரங்களின் உள்ளமைப்பில் அடங்கியுள்ளது. எனவே, தாவரங்களிலிருந்து இது ஏராளமாகக் கிடைக்கிறது. மரத்தில் லிக்னின் என்ற பசைப் பொருள் உண்டு. இது மரத்திலுள்ள செல்லுலோஸ் நார்களை மரத்துடன் நன்கு ஒட்டிக்கொள்ளச் செய்கிறது.

தாவரங்கள் வளையவோ அல்லது வேண்டியவாறு நெகிழ்ந்து கொடுக்கவோ இயலும் வகையில் இயங்கச் செய்வது செல்லுலோசேயாகும். தாவரங்களில் ஏற்படும் மிருதுத்தன்மைக்குச் செல்லுலோசே காரணமாகும்.

பசுந்தாவரங்கள் தங்கள் சொந்தப் பயன்பாட்டிற்காகவே செல்லுலோசை உருவாக்குகின்றன. செல்லுலோஸ் உருவாக அடிப்படை வேதியியற் பொருட்களாக அமைவன சர்க்கரைச் சத்து, கார்பன், ஹைட்ரஜன், ஆக்சிஜன் ஆகியனவாகும். இவற்றைத்