பக்கம்:இளையர் அறிவியல் களஞ்சியம்.pdf/195

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நிக்கோட்டின்

185

றால் அறிவு வளர்ச்சி குன்றும். ஆளுமைத் தன்மை பாதிக்கும்.

நாளமில்லாச் சுரப்பிகள் சுரக்கும் சுரப்பிகள் தனித்தனியாக எந்த உறுப்பையும் இயக்குவதில்லை. உடலிலுள்ள அனைத்து நாளமில்லா சுரப்பிகளும் ஒருங்கிணைந்து ஒன்றாகச் செயல்படும்போதே அவற்றின் ஆற்றல் முழுமையாக வெளிப்படும். ஏதோ ஒருநாளமில்லாச் சுரப்பி பழுதடைந்தால் கூட மற்ற நாளமில்லாச் சுரப்பிகளின் இயக்கம் பாதிப்படைகிறது. அதனால், உடலுக்குத் தீங்கு விளைகிறது. எனவே, அனைத்து நாளமில்லாச் சுரப்பிகளும் ஒரே சமயத்தில் இயங்கி சுரப்புகளை வெளிப்படுத்தி ஒழுங்காகப் பணியாற்றினால்தான் உடலுக்கு அனைத்து நலன்களும் உண்டாக முடியும்.

நாளமில்லாச் சுரப்பிகளில் தலையில் மூளையின் அடிப்பகுதியில் அமைந்துள்ள பிட்யூட்டரி சுரப்பி, குரல்வளைக்குக் கீழாகவும் இருபுறங்களிலும் உள்ள தைராய்டு சுரப்பி, பாராத்தைராய்டு சுரப்பிகள், சிறுநீரகங்களின் உச்சிப் பகுதியில் அமைந்துள்ள அட்ரீனல் சுரப்பி, மார்புக்கு அடியில் கடற்பஞ்சுபோல் உள்ள தைமஸ் சுரப்பி, கணையத்திலுள்ள ’லாங்கர்ஹான்ஸ் தீவுகள்’ எனப்படும் திசுப் பகுதி, வயிற்றிற்கு மேலாக அமைந்துள்ள மண்ணீரல் ஆகியலை முக்கிய நாளமில்லாச் சுரப்பிகளாகும்.

உடல் பழுதில்லாமல் ஒழுங்காக இயங்க நாளமில்லாச் சுரப்பிகள் அனைத்தும் ஒருங்கிணைந்து பணியாற்றுவது அவசியமாகும்,


நிக்கல் : இது ஒரு தனிமம் ஆகும். இத் தனிமம் தனியாகக் கிடைப்பதில்லை. பிற தனிமங்களோடு சேர்ந்த கலவையாகவே கிடைக்கிறது. அதிலிருந்து நிக்கல் தனியே பிரித்தெடுக்கப்படுகிறது. நிக்கல் உலகிலேயே அதிக அளவில் கிடைக்கும் நாடு கனடாவாகும்.

நிக்கல் வெள்ளி போன்று நிறம் தரும் உலோகமாகும். மிகவும் கெட்டித்தன்மை கொண்ட இவ்வுலோகத்தை கம்பியாக நீட்டலாம் தகடாக அடிக்கலாம்.

நிக்கல், எதனாலும் அரிக்கப்படுவதில்லை. எனவே, பால்பண்ணை போன்றவிடங்களில் பயன்படுத்தும் பாத்திரங்கள் நிக்கலாலேயே செய்யப்படுகின்றன. எந்திர உறுப்புகளும் நிக்கலால் செய்யப்படுகின்றன. நிக்கல் எளிதில் காந்தத் தன்மை பெறும் இயல்புடையதாதலின் காந்தத் தொழிலில் நிக்கல் அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது. நிக்கலோடு இன்வார் எனும் உலோகத்தைச் சேர்த்து புதுக்கலவை உலோகம் உருவாக்கப்படுகிறது. இக்கலவை உலோகம் வெப்பத்தால் விரிவடையும் தன்மை இல்லாதது. எனவே, கடிகாரத்துக்கு வேண்டிய உறுப்புகள் இக்கலவை உலோகத்தாலேயே செய்யப்படுகின்றன. இதேபோன்று நிக்கல் உலோகத்தோடு குரோமியத்தைக் கலந்து புதுக்கலப்பு உலோகம் தயாரிக்கப்படுகிறது. இக்கலப்பு உலோகம் ‘நைக்ரோம்' என அழைக்கப்படுகிறது. இஃது வெப்பத்தை அதிக அளவில் தாங்கும் தன்மை கொண்டதாகும். எனவே, மின் அடுப்பு போன்றவை தயாரிக்க இக்கலப்பு உலோகத்தையே அதிக அளவில் பயன்படுத்துகிறார்கள். நிக்கலோடு செம்பைச் சேர்த்து உருவாக்கப்படும் 'மானல் உலோகம்' (Monal metal) எனும் கலப்பு உலோகத்தைக் கொண்டு நாணயங்கள் செய்யப்படுகின்றன. நிக்கலோடு செம்பையும் துத்தநாகத்தையும் கலந்து 'ஜெர்மன் வெள்ளி’ எனும் கலப்பு உலோகம் உருவாக்கப்பட்டுள்ளன. வெண்ணிற நகைகள், உயர்ந்த கரண்டிகள், கத்திகள் செய்யப் பயன்படுகிறது.

இஃது வெள்ளியால் செய்யப்பட்டது போன்ற தோற்றத்தை வழங்கும். நிக்கலின் துணைகொண்டு பல்வேறு வேதிப் பொருட்கள் உருவாக்கிப் பயன்படுத்தப்படுகின்றன.

தூளாக்கப்பட்ட நிக்கல் எண்ணெய்களை, வனஸ்பதி, டால்டா போன்றவைகளாக மாற்றும் வினையில், வினைவேக மாற்றியாகவும் பயன்படுகிறது.


நிக்கோட்டின் : இது ஒருவகை நச்சுப் பொருளாகும். இஃது புகையிலையில் அதிகமாக உள்ளது. நிறமற்றது. எண்ணெய்போல் உள்ளதாகும். இது கார்பன், நைட்ரஜன், ஹைட்ரஜன் கலந்த கரிமச் சேர்மமாகும். காரச் சுவையும் கசப்பும் கலந்த இது நீரில் கரையும் தன்மை கொண்டதாகும். புதிதாகப் புகையிலையைச் சுவைத்தால் தலைசுற்றல் ஏற்படும். இதைப் புகையிலையாகச் சுவைக்கும்போதும் சுருட்டாக, சிகரெட்டாகப் புகைக்கும்போதும் நரம்புகளைத் தூண்டுகிறது. புகையிலைச் சாரை விழுங்குவதால் நாளடை