பக்கம்:இளையர் அறிவியல் களஞ்சியம்.pdf/199

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நிலநடுக்கம்

189

தனித்தனியே பிரித்தெடுத்துப் பல்வேறு வகைகளில் பயன்படுத்துகின்றனர். இவ்வாறு நிலக் கரியிலிருந்துநிலக்கரி வாயு (Coal Gas) பெறப்படுகிறது. இதுவே கரிப்புகைக்குக் காரணமானதாகும். நிலக்கரியை மேலும் கெட்டிப்படுத்தி கல்கரி (Coke) தயாரிக்கப்படுகிறது. நிலக்கரியிலிருந்து முழுமையாக வாயுவை வெளியேற்றிய பின்னர் மீண்டும் உலையியிலிட்டுக் காய்ச்சி கரித் தார் பெறப்படுகிறது. இவ்வாறே அம்மோனியா திரவமும் பெறப்படுகிறது.

நிலக்கரியில் பல வகைகள் உண்டு. நன்கு முதிர்ச்சி பெறாத நிலக்கரி (Peat), புகை நிலக்கரி (Bituminous), பழுப்பு நிலக்கரி (Lignite), அனல் நிலக்கரி (Anthracite) என அவை அழைக்கப்படுகின்றன. இவற்றுள் புகை நிலக்கரி எரிக்கப்படும்போது மிகுந்த வெப்பத்தை வெளிப்படுத்தும். இதை மிகு வெப்பத்திற்கும் அழுத்தத்திற்கும் ஆளாக்கும்போது அனல் மின் நிலையங்களுக்குத் தேவைப்படும் அனல் நிலக்கரி கிடைக்கிறது. ஈரப்பசையே இல்லாத சுத்தமான கரியான இஃது மிகுந்த வெப்பத்தை வெளிப்படுத்தும், பூமிக்கடியில் முழுமையும் கரியாகாமல் அறைகுறையாகக் கரியாகும் தாவரப் பொருளே முதிர்ச்சி பெறாத நிலக்கரி. இத்தகைய முதிர்ச்சி பெறா நிலக்கரி மிகுந்த அழுத்தத்திற்காளாகும்போது அது பழுப்பு நிலக்கரியாக மாறுகிறது.

உலகிலேயே மிக அதிகமாக நிலக்கரி கிடைக்கும் நாடுகள் பிரிட்டன், அமெரிக்கா, ரஷ்யா, ஃபிரான்ஸ் நடுகளாகும். இந்தியாவில் பீகார், அஸ்ஸாம், மேற்கு வங்காளம் போன்ற மாநிலங்களில் நிலக்கரி பெருமளவில் வெட்டியெடுக்கப்படுகிறது. இங்குக் கிடைப்பவை உயர்வகை நிலக்கரியாகும். பழுப்பு நிலக்கரி தமிழ்நாட்டில் நெய்வேலியிலும் காஷ்மீரப் பகுதிகளிலும் கிடைக்கின்றது.


நிலநடுக்கம் : இது 'நில அதிர்ச்சி’ என்றும் அழைக்கப்படுவதுண்டு. நில நடுக்கம் எந்த நேரத்திலும் ஏற்படலாம். இதனால் அப்பகுதிகள் பெரும் சேதங்களுக்கு ஆளாகும். நிலப் பிளவுகளும், பூமி வெடிப்புகளும் நிலச் சரிவுகளும் ஏற்பட, அப்பகுதி வாழ் மக்களின் வாழ்க்கை பெருந் துன்பத்துக்கு ஆளாகிறது. நில அதிர்ச்சி தரைப் பகுதியில் மட்டுமல்ல, கடற் பகுதிகளிலும் உண்டாவது உண்டு. அப்போது பேரலைகள் தோன்றி கடல் வாழ் உயிரினங்களையும் கடற்மேற் செல்லும் கப்பல்களையும் அலைக்கழிக்கும். இதற்குக் காரணம் என்ன?

நிலநடுக்கத்தால் ஏற்பட்ட வெடிப்பு

நாம் வாழும் பூமியின் அடிப்பகுதி பல்வேறு அடுக்குகளால் ஆனது. அதன் உச்சிப் பகுதியாகிய மேற்பகுதி, புறணி என்று அழைக்கப்படுகிறது. அஃது மிகவும் கெட்டித்தன்மை கொண்டதாகும். இந்நிலத்தின் உட்பகுதியோ மிகுந்த வெப்பமுடையதாக உள்ளது. இதனால் அங்கு அழுத்தம் அதிகம். மிகு வெப்பத்தின் காரணமாக உட்பகுதி திரவ நிலையில் அமைந்துள்ளது. அவற்றினூடே உள்ள பெரும் பாறைகள் பிளவுபட அல்லது அவற்றின் நிலை மாற நேரிடும்போது அவை அமிழவோ உயரவோ இடம் மாறவோ செய்கின்றன. அப்போது நிலம் அசைகிறது. இந்நிகழ்ச்சியின் விளைவாக ஏற்படும் ஆற்றல் வெளிப்