பக்கம்:இளையர் அறிவியல் களஞ்சியம்.pdf/200

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

190

நீர்

படுகிறது. இஃது அதிர்ச்சி அலைகளாக பூமியினுாடே செல்கிறது. இதுவே பூமி அதிர்ச்சியை அல்லது நிலநடுக்கத்தை தோற்றுவிக்கிறது. இதன் விளைவாக பெரிதாகும்போது பூகம்பமாக மாறி நெருப்புக் குழம்பையும் பாறைத் துண்டுகளையும் பூமிக்கு மேலாக வீசியடிக்கிறது. நிலநடுக்கத்தின்போது பூமியில் பெரும் பிளவுகள் ஏற்படுகின்றன. வெடிப்புகள் உண்டாகிறது. நிலச் சரிவுகள் ஏற்படுகின்றன. இதனால் கட்டிடங்கள் நொறுங்குகின்றன. இந் நிலநடுக்கங்களால் லேசாகவோ, கடுமையாகவோ சேதங்கள் ஏற்படும். உட்பகுதிகளில் ஏற்படும் அதிர்ச்சி அலைகள் பூமியினுடே செல்லும் நேரத்தைப் பொறுத்து, நிலநடுக்க நேரம் அமையும்,

இந்தியாவில் இமயமலைப் பகுதிகளில் நில நடுக்கம் அடிக்கடி ஏற்படுவதுண்டு. தென் பகுதிகளில் ஏற்படுவதில்லை. காரணம் இப்

நில அதிர்வைக் கண்டறியும் பண்டையக் கருவி

பகுதி கடுமையான இறுகிய பாறைகளாலான உட்பகுதியைக் கொண்டிருப்பதேயாகும். லேசான நில அதிர்வுகள் மக்களால் அதிகம் உணரப்படுவதில்லை. ஆயினும் நில அதிர்ச்சி மாணி (Seismograph)யைக் கொண்டு அறிந்து கொள்ளலாம், நிலநடுக்கத்தின் வலிமையை ரிக்டர் எனும் அளவைக் கருவியைக் கொண்டு அளந்தறியலாம்.

1991 அக்டோபர் 20இல் உத்திரப்பிரதேசத்தில் ஏற்பட்ட நிலந்டுக்கம் பல்லாயிரம் உயிர்களையும் வீடு முதலான உடமைகளையும் அழிப்பதாய் அமைந்தது. 1998ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் மஹாராஸ்டிர மாநிலத்திலுள்ள மராத்துவாடாப் பகுதியில் லத்துார் முதலான பல கிராமங்களில் ஏற்பட்ட நிலநடுக்கம் பெரும் நாசத்தை ஏற்படுத்தியது. இதனால் முப்பதினாயிரம் மக்களும் ஏராளமான கால்நடைகளும் மடிய நேரிட்டது.


நீர் : வாழ்க்கைக்கு இன்றியமையாதது நீர் ஆகும், உலகப் பரப்பில் 70 சதவீதம் நீர் உள்ளது. கடல் ஏரி போன்ற நீர்நிலைகளில் மட்டுமல்லாது மண்ணுக்கடியிலும் காற்றிலும் பிற உயிர்களிடத்தும் நீர் உள்ளது. நம் உடலில் 70 சதவீதம் நீர் இருப்பதாகக் கணக்கிட்டுள்ளனர். நாம் உண்ணும் உணவுப் பொருட்களிலும் வேண்டிய அளவு நீர் உள்ளது.

தூய நீருக்கு மனமோ, நிறமோ, சுவையோ இல்லை. மழை நீரும் நீராவியிலிருந்து பெறும் நீரும் தூய நீராகும். சில சமயம் மழை நீரும் தூய்மை கெடுவதும் உண்டு. காற்று மண்டலம் வழியே மழை பெய்யும்போது காற்றில் உள்ள ஆக்சிஜனும் நைட்ரஜனும் கார்பன் டையாக்சைடும் மழையோடு கலந்து, கரைந்து பெய்வதுண்டு. தரையில் விழும் மழை நீர் நிலத்தில் பாய்ந்து செல்லும்போது அங்குள்ள சுண்ணாம்பு மற்றும் சிலவகை உப்புக்களோடு கலந்து கடலை அடைகிறது.

திரவப் பொருளான நீர் திடவடிவில் பனிக் கட்டியாகவும் காற்றில் நீராவியாகவும் உள்ளது. நீரின் கொதி நிலை 100 டிகிரி, நீர் பனிக் கட்டியாக மாறும்போது அதன் கன அளவு அதிகரிக்கிறது. பாறைகளுக்கு அடியில் தேங்கியுள்ள நீர் உறைந்து பனிக்கட்டியாகும்போது பாறையின் சிறு பகுதிகள் உடைகின்றன. இவை ஆற்று வெள்ளத்தால் அடித்துச் செல்லப்படும்போது உராய்வினால் தேய்ந்து மணலாகிறது. கடுங்குளிர்ச்சி காரணமாக பெரும் நீர்ப்பரப்புகள் பனிக்கட்டியாகிவிடும். அப்பணிக்கட்டி அடி நீரின்மீது மிதக்கும், பனிக்கட்டி நிலையில் இருக்கும்போது அடிநீர் குளிராமல் மேலுள்ள பனிக்கட்டி காக்கிறது.

பதினெட்டாம் நூற்றாண்டுவரை நீரை ஒரு தனிப் பொருளாகவே கருதி வந்தனர். அதன் பிறகுதான் ஆக்சிஜனும் ஹைட்ரஜனும் கலந்த ஒரு கூட்டுப் பொருளே நீர் என்பது ஆய்வு மூலம் கண்டறியப்பட்டது.

நீரின் தன்மையைக் கொண்டு அதனை இரு வகையினவாகப் பகுப்பர். ஒன்று மென்னீர் (Soft water), மற்றோன்று கடின நீர் (Hard