பக்கம்:இளையர் அறிவியல் களஞ்சியம்.pdf/22

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

12

அடினாய்டு சுரப்பி

மேற்புறத்தில் ஒன்றுவீதம் இருபுறமும் அமைந்திருக்கும். இவை முக்கோண வடிவில் உள்ளன. இவை ஒவ்வொன்றும் இரு பகுதிகளைக் கொண்டுள்ளன. உட்புறப்பகுதிக்கு அகணி என்று பெயர். வெளிப்புற பகுதிக்குப் புறணி என்று பெயர். இச்சுரப்பியின் எடை சுமார் 12 கிராம்களாகும்.

அட்ரீனல் அகணியிலிருந்து அட்ரீனலின் மற்றும் நார் அட்ரீனலின் என்ற இருவகை

அட்ரீனல் சுரப்பிகள்


இயக்கு நீர்கள் சுரக்கின்றன. புறணியிலிருந்து "ஸ்டீராய்ட்ஸ்" (Steroids) எனும் ஹார்மோன்கள் சுரக்கின்றன. இவை நேரடியாக இரத்தத்தில் கலந்து விடுகின்றன. இவற்றின் முக்கியப் பணி திசுக்களைத் தூண்டுவதும், உடம்பின் வளர்சிதை மாற்றத்தைச் சீராக நடைபெறச் செய்வதுமாகும்.

அட்ரீனல் சுரப்பியிலிருந்து ஈஸ்ட்ரோஜன், புரோஜெஸ்ட்ரான் ஹார்மோன்களும் மிகச் சிறிய அளவில் சுரக்கின்றன.

அடிநாச்சதை : இதை 'உள் நாக்கு' என்றும் கூறுலார்கள். ஆங்கிலத்தில் இது 'டான்சில்' (Tonsil) என்று அழைக்கப்படுகிறது. அடி நாச்சதை தொண்டையில் உணவுக் குழலுக்கு இருபுறமும் அமைந்துள்ளன. இவை முட்டை வடிவில் உள்ளன. தசையால் ஆனவை. இவை ஒரு வகை நிணநீர் திசுவைச் சேர்ந்தவை. இவை வாயின் உட்புறத்தில் அமைந்துள்ளன. இதன் மூலம் மூச்சுக்குழல், உணவுக்குழல் இன்னும் அடுத்துள்ள பிற பொந்துகளையும் கிருமிகளின் தாக்குதலிலிருந்து இவை காக்கும் காப்பானாகவும் பணியாற்ற முடிகிறது.

அடிநாச்சதை (டான்சில்)

எனினும், சிற்சில சமயங்களில் அடி நாச் சதை அழற்சி அடைவதும் உண்டு. அப்போது அப்பகுதி நுண்கிருமிகள் வாழுமிடமாக மாறிவிட ஏதுவாகின்றது. இதன் மூலம் இதயம், சிறுநீரகம் போன்ற உறுப்புக்கள் பாதிப்படைய நேர்கின்றது. அத்தகைய தருணங்களில் இவ்வழற்சியைப் போக்க அறுவை மூலம் அடிநாச்சதைகள் அகற்றப்படுகின்றன. இந்த அறுவை சிகிச்சையால் பாதிப்பு ஏதும் ஏற்படுவதில்லை.

அடினாய்டு சுரப்பி : 'அடினாய்டு' என்பது கிரேக்க மொழிச் சொல்லாகும். இதற்குச் 'சுரப்பியின் வடிவம்' என்பது பொருளாகும். அடித்தொண்டையில் அதிகப்படியாக நிண நீர் இழைமம் ஏற்படுவதுண்டு. இதுவே, 'அடினாய்டு’ என்பது. இதை மூன்றாவது அடி நாச்சதை என்றும் அழைப்பதுண்டு. இதுவும் உள்நாக்கைப் போன்றே பல அடுக்குத் திசுக்களைக் கொண்டதாகும். சில சமயங்களில் இதுவும் அழற்சிக்காளாகி தொண்டை நோயை உண்டாக்கும். அச்சமயங்களில் அடினாய்டு சுரப்பி பருத்து விடும். சளி தொண்டையில் நிரம்புவதால் அப்போது மூக்கால் மூச்சுவிடுவது கடினமாகி, வாயால் மூச்சுவிட நேரிடும். மேலும், நிறைய சளி கொட்டும்; வறட்டு இறுமல் ஏற்படும்; மூக்கால் பேசுவதுபோல் இருக்கும். இவை