பக்கம்:இளையர் அறிவியல் களஞ்சியம்.pdf/223

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புரோட்டோசோவா

213

வெப்பக் காற்றும் குளிர்காற்றும் இணையும்போது அதன் கலப்பு மிகச் சிறுஅளவிலேயே அமைகிறது. அப்போது சாய்வான பரப்பு நெடுக ஓரளவு வெப்பமுள்ள காற்று குளிர் காற்றின்மீது பரவுகிறது. இதன்மூலம் வெப்பக்

தமிழகத்தை நெருங்கும் புயல்

காற்று ஒரளவு ஈரமடைகிறது. இதன் விளைவாக மேகம் உருவாகிறது. இறுதியில் மழையாகவோ அல்லது பனிப் பொழிவாகவோ ஆகிறது.

இன்று புயலின் அறிகுறிகள் தோன்றும் போதே அதைக் கண்டறிந்து அறிவிக்க எச்சரிக்கைரேடார் சாதனங்களும் செயற்கைக் கோள்களும் பயன்படுத்தப்படுகின்றன.


புரோட்டோசோவா : மைக்ரஸ்கோப் எனும் உருப் பெருக்காடி மூலம் மட்டுமே காணக்கூடிய மிக நுண்ணிய உயிரினமாகும். இது ஒரு ஓரணு உயிராகும். குளம் அல்லது குட்டையிலிருந்து எடுக்கப்படும் ஒரு கரண்டி நீரில் பல இலட்சக்கணக்கான புரோட்டோசோவாக்கள் உள்ளன.

புரோட்டோசோவாக்கள் பெரும்பாலும் நீரிலும் ஈரமான இடங்களிலுமே வாழ்கின்றன. இஃது ஒரணு உயிரினமாயினும் மற்ற பிராணிகளைப் போன்றே இவைகளும் வேண்டிய உணவைத் தேடிப் பெறுகின்றன. உண்ணும் உணவை சீரணிக்கின்றன. மற்ற உயிரினங்களைப் போன்றே இவைகளும் சுவாசித்தே வாழ்கின்றன. உண்ட உணவிலிருந்து வெளிப்படும் கழிவுப் பொருட்களை அவ்வப்போது வெளியேற்றுகின்றன. இனப்பெருக்கமும் செய்து கொள்கின்றன.

புரோட்டோசோவாக்கள் மிக நுண்ணிய உயிரினமாக இருந்த போதிலும் இவற்றில் சிலவற்றிற்கு உடல்மேல் ஓடு உண்டு. இவை இறப்பதால் தங்கும் இலட்சக்கணக்கான இவ்வோடுகள் ஒன்று சேர்ந்ததே கடலடியில் உருவாகும் சீமைச் சுண்ணாம்புத் திட்டுகள்.

புரோட்டோசோவாக்களின் இனப்பெருக்கம் விந்தையானதாகும். ஒவ்வொன்றும் ஒன்று. அல்லது இரண்டாகப் பிரியும். பிரியும் ஒவ்வொரு பகுதியும் ஒரு புரோட்டோசோவாவாக விரைந்து மாறி வளரும். இவ்வாறுதான் இவற்றின் இனப்பெருக்கம் நிகழ்கிறது.

புரோட்டோசோவாக்கள் அனைத்தும் ஒரே வகையானவை அன்று. அவை பலவகைப்படும். உலகில் சுமார் இருபத்தையாயிரம்