பக்கம்:இளையர் அறிவியல் களஞ்சியம்.pdf/25

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அண்டவெளி

15

பேரமைப்பாக பேரண்டம் இருந்தது. அதில் திடீரென ஏற்பட்ட பெரு வெடிப்பின் (Big

அண்டவெளி

Bang) காரணமாக வெடித்துச் சிதறி சூரிய மண்டலமும் நட்சத்திரக் கூட்டங்களும் உருவாயின.

அண்ட வெளியில் பல நட்சத்திரக் கூட்டங்கள் உள்ளன. அவற்றுள் மிகப் பெரியதாக அமைந்திருப்பது ‘பால்வீதி மண்டலம்’ எனப்படும் ஆகாய கங்கையாகும்.

நாம் காணும் நட்சத்திரங்கள் அனைத்தும் பால்வீதி மண்டலத்தில் உள்ளவைகளாகும். இது சுமார் 20-லிருந்து 24 வரையிலான நட்சத்திரக் கூட்டங்களைக் கொண்டிருப்பதாகக் கணக்கிட்டிருக்கிறார்கள். பால்வீதி மண்டலத்தின் கோடியில் தான் சூரிய மண்டலம் அமைந்துள்ளது. சூரியனும் ஒரு நட்சத்திரமேயாகும்.

இதற்கு 'பால்வீதி மண்டலம்' என்ற பெயர் எவ்வாறு ஏற்பட்டது தெரியுமா? இதைக் கண்டறிந்த கிரேக்கர்கள் 'கேலக்சி’ (Galaxy) என்ற கிரேக்கச் சொல்லால் அழைத்தார்கள். அச்சொல்லுக்கு ‘பால்’ என்பது பொருளாகும். இம்மண்டலத்திலுள்ள நட்சத்திரங்கள் பால் போல காணப்பட்டதால் இப்பெயர் பெற்றது. பின்னர் இச்சொல் ஆங்கிலத்தில் மில்கிவே (Milkyway) என்று மொழி மாற்றி அழைக்கப்பட்டது. அச்சொல் பின்னர் தமிழில் 'பqல்வீதி’ என பெயர்க்கப்பட்டு பயன்படுத்தப்பட்டது. இதே சொல் வடமொழியில் 'மந்தாகினி’ எனக் குறிக்கப்படுகிறது. கங்கை நதிக்கு 'மந்தாகினி’ என்ற பெயரும் உண்டு. எனவே, பால்வீதியை 'ஆகாய கங்கை' என்ற பெயரால் அழைப்பதும் உண்டு.

பால்வீதி எனும் ஆகாய கங்கை

பால்வீதியாகிய ஆகாய கங்கையின் வடிவம்