பக்கம்:இளையர் அறிவியல் களஞ்சியம்.pdf/284

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

274

வால் நட்சத்திரம்

அதனைச் சூடாக்குவர். வெப்பத்தின் காரணமாக உள்ளிருக்கும் மெழுகு உருகி துளை வழியே

வார்ப்புப் பெட்டி
உலோகக் குண்டு ஒன்று வார்க்கப்படுகிறது

வெளியேறி விடும். பிறகு, அதே துவாரத்தின் வழியாக உருகிய உலோகக் குழம்பை ஊற்றி நிரப்புவர். பின், நன்கு குளிர்ந்தபின் களிமண் வார்ப்பை உடைத்து, உள்ளேயுள்ள கெட்டிப்பட்ட உலோக வார்ப்பை எடுப்பர். மிக நுண்மையான சிலைகளும் வேலைப்பாடு மிக்க குத்துவிளக்குகளும் இம்முறையிலேயே வார்த்தெடுக்கப்படுகின்றன. விமானம் போன்றவற்றிற்கான நுட்பமான உறுப்புகளையும் இவ்வகையிலேயே வார்த்தெடுக்கின்றனர்.

வார்ப்பு வேலைகளுக்கு இரும்பு மட்டுமல்லாது. எஃகு, செம்பு, அலுமினியம், வெண்கலம், பித்தளை, தங்கம், வெள்ளி, மக்னீசியம் போன்ற பல்வேறு வகையான உலோகங்களும் பயன்படுத்தப்படுகின்றன. இவைகளை ஐம்பொன் போன்ற பலவகை உலோகக் கலவைகளும் சிலை போன்றவற்றை வார்க்கப் பயன் படுத்தப்படுவதுண்டு.


வால் நட்சத்திரம் : இஃது ஆங்கிலத்தில் 'காமெட்' (Comet) என்று அழைக்கப்படுகிறது. நம் நாட்டில் இதற்கு 'தூமகேது' என்ற வேறொரு பெயரைப் பெற்றிருப்பினும் உண்மையில் இது நட்சத்திரமல்ல. சூரியக் குடும்பத்தைச் சார்ந்த ஒருவகை ஒளிரும் பொருளேயாகும். பூமி சூரியனைச் சுற்றி வருவது போன்றே வால் நட்சத்திரங்களும் கதிரவனையே சுற்றி வருகின்றன. வால் நட்சத்திரங்கள் பலவாயினும் அவற்றில் ஒரு சில மட்டுமே நம் கண்களுக்கு எப்போதாவது புலப்படும். தொலைநோக்கி மூலம் பல வால் நட்சத்திரங்களைக் காண முடியும்.

வால்நட்சத்திரங்கள் சூரியனை நெருங்கும்போது கதிரவனிடமிருந்து வெளிப்படும்அழுத்தமான ஒளிர் கதிர்கள் வால் நட்சத்திரங்களின் மீது முழுமையாகப் படுகின்றன. அப்போது வால் நட்சத்திரத்தின் தலைப்பகுதியில் உள்ள வாயுவும் பிற துகள்களும் எதிர்ப்புறத்தில் விரைந்து அழுத்தம் மிக்க சூரியக் கதிர்களால் தள்ளப்படுகின்றன. இவையே வால் நட்சத்திரத்தின் வால் பகுதியாகும். இவ்வாலின் நீளம் ஐம்பதாயிரத்திலிருந்து ஒரு இலட்சத்து ஐம்பதாயிரம் கி.மீ. தூரம்வரை நீண்டிருக்கும். ஒரு சிலவற்றின் வால் பகுதி 16 கோடி கி.மீ. தூரம் வரை இருப்பதாகக் கண்டறிந்துள்ளனர்.

இந்த வால்நட்சத்திரங்கள் கதிரவனை நெருங்கும்போது பேரொளி பெறுவதால் நம் கண்களுக்குப் பளிச்சென தெரிகின்றன. இவ்வாறு காணப்படும் வால் நட்சத்திரங்களை முதலில் யாரெல்லாம் கண்டறிந்து கூறினார்களோ அந்த விஞ்ஞானிகளின் பெயராலேயே அவை அழைக்கப்படுகின்றன. ஹாலி என்பவரால் முதன்முதலில் கண்டறியப்பட்ட வால் நட்சத்திரம் 'ஹாலி வால் நட்சத்திரம்’ என அழைக்கப்படுகிறது. இது முதன் முறையாகக் கண்டுபிடிக்கப்பட்ட பின்பு 1986ஆம் ஆண்டில் மீண்டும் தோன்றியது. என்கே என்ற வால்நட்சத்திரம் மூன்றரை ஆண்டுகளுக்கு ஒரு முறையே தோன்றுகிறது. சில வால் நட்சத்திரங்கள் பல்லாயிரம் ஆண்டுகட்கு ஒரு முறை தோற்றம் தரும். அத்தகைய வால் நட்சத்திரங்களுள் ஒன்றான கொஹொட்டெக் வால்நட்சத்திரம் 1974ஆம் ஆண்டு உலகின் பல பகுதிகளில் தோற்றமளித்தது. 1957இல் ரோலண்ட் என்ற வால் நட்சத்திரம் வெளிப்பட்டது.

'கோமெட் ஷு மேக்கர் லெவி' என்று பெயரிடப்பட்ட வால் நட்சத்திரம் 21 துண்டுகளாகச் சிதறி வியாழன் கிரகத்தில் 1994 ஜூலை 16 அன்று மோதி மறைந்தது. மணிக்கு பதினெட்டாயிரம் மைல் வேகங் கொண்ட இஃது 18 இலட்சம் அணுகுண்டு சக்தி கொண்டதாகும். வியாழன் கிரகத்தின் மேற்பகுதி ஐஸ்கட்டிகளாக அமைந்திருப்பதால்