பக்கம்:இளையர் அறிவியல் களஞ்சியம்.pdf/285

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வால்வு

275

இல்வால்வு நட்சத்திர மோதலால் பெரும் அபாயம் ஏதும் ஏற்படவில்லை. ஐஸ்கட்டியில்

மோதிய பின்னர் அஃது ஆவியாகி அண்டவெளியில் கலந்துவிட்டது.


வால்வு : இயந்திரங்களில் காற்று அல்லது வாயு அல்லது திரவப் பொருட்கள் செல்வதை முறைப்படுத்தும்-கட்டுப்படுத்தும் ஒருவகை எந்திர உறுப்பு வால்வு ஆகும். இது பல்வேறு வகைப்பட்ட பொருட்களில் அமைந்து இன்றியமையாப் பணியைச் செய்கிறது, நம் உடலிலும் இதயம், சிரை போன்ற இரத்தக் குழாய்களிலும் பெருங்குடல் வாயிலிலும் சவ்வுப் படலக் கதவுபோல் ஒருவழிப்பாதை வால்வுகள் அமைந்துள்ளன. இவை உடலியல் வால்வுகள் என அழைக்கப்படுகின்றன. இதே போன்று இசைக் கருவியாகிய துளைக் கருவியிலும் முறையாகக் காற்றைக் கட்டுப்படுத்த இத்தகைய வால்வுகள் பிஸ்டன்கள் எனும் பெயரால் அமைந்துள்ளன.

சாதாரணமாக நாம் வீட்டில் பயன்படுத்தும் தண்ணீர்க் குழாய்களில், பம்புகளில் நீரை முறையாகக் கட்டுப்படுத்த இவ்வால்வுகளே பெருந் துணை புரிகின்றன. சைக்கிளுக்குக் காற்றடிக்கும் பம்புகளில் காற்றை வெளியேற்றுவதற்கென ம்ட்டும் வால்வுகள் அமைக்கப்பட்டுள்ளன. இயந்திரத்தின் அளவைப் பொருத்து வால்வுகளின் பருமனும் அமைப்பும் இருக்கும். நீராவி என்ஜினில் பயன்படுத்தப்படும் வால்வுகள் நழுவு வால்வுகள் (Side valves) என அழைக்கப்படுகின்றன. அதேபோன்று மோட்டார் வாகனங்களில் இயங்கும் உள்ளெரி என்ஜின்களில் பயன்படுத்தப்படும் வால்வுகள் குதிவால்வுகள் எனக் கூறப்படும். நீராவி கொதிகலனைக் கொண்ட இயந்திரங்களில்

வால்வோடு கூடிய குழாய்

காப்பு வால்வுகள் (Safety valves) பயன்படுத்தப்படுகின்றன. நாம் சாதாரணமாக வீட்டில் பயன்படுத்தும் சமையலுக்கான பிரஸ்லர் குக்கரிலும் இத்தகைய காப்பு வல்வுகளே அமைக்கப்பட்டுள்ளன.

இதயத்திலும் சிரைகளிலும் ஒருவழிப் பாதையாக இரத்தவோட்டம் நடைபெற வால்வுகள் அமைந்துள்ளது. இதேபோன்று முன்பு தொலைக்காட்சிப் பெட்டி, வானொலிப் பெட்டி போன்றவற்றில் மின்சாரம் ஒருவழிப் பாதையாகச் செல்லும் வகையில் வால்வுகள் அமைக்கப்பட்டுள்ளன. எனினும், தற்போது வால்வுகள் இல்லாது டிரான்ஸிஸ்டர் மற்றும் தொகு சுற்றுகள் (Indegrated circuits) மூலம் அவை உருவாகின்றன.


வான ஆராய்ச்சி நிலையங்கள் : விண்ணிலுள்ள சூரியன், சந்திரன் உட்பட உள்ள கோள்கள், கிரகங்கள், நட்சத்திரங்கள் இன்னும் வானவியல் தொடர்பான பல்வேறு விஷயங்கள் பற்றிய ஆராய்ச்சிக்கென நிறுவப்பட்ட நிலையங்கள் ‘வான ஆராய்ச்சி நிலையங்கள்' ஆகும். இவை பெரும்பாலும் உயரமான மலை உச்சிகளிலேயே அமைக்கப்படுகின்றன. காரணம், வானை நோக்கி அமைக்