பக்கம்:இளையர் அறிவியல் களஞ்சியம்.pdf/297

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

விமான தளம்

287

ஏறிச் செல்ல வசதியாக நகரங்களுக்குச் சற்று வெளியே அமைக்கப்படுகின்றன. அங்கு எல்லா வசதிகளும் அமைந்திருக்கும். உலகிலுள்ள நகரங்கள் அனைத்திலும் விமான தளங்கள் அமைந்துள்ளன. சில பெரிய நகரங்களில் ஒன்றுக்கு மேற்பட்ட விமான தளங்கள் அமைந்திருக்கும். இவைகளின் வழியாக உள்நாட்டு, வெளிநாட்டு விமானங்கள் வந்து செல்லும்.

சாதாரணமாக விமான தளங்கள் சமதளமான சமவெளிப் பகுதிகளிலேயே அமைந்திருக்கும். மலைகளோ குன்றுகளோ அருகில் இருக்கக் கூடாது; சாதாரணமாக காற்று வீசும் திசைக்கு எதிர்த்திசையில் விமானம் இறங்கவோ அல்லது ஏறவோ வேண்டியிருப்பதால் காற்று வீசும் போக்கை அனுசரித்து விமான தளங்கள் அமைக்கப்படுகின்றன.

விமானங்கள் இறங்கும்போது நீண்டதுாரம் ஓடியே வானில் எழும்பிப் பறக்க வேண்டியிருப்பதாலும் இதற்கென தனித்தன்மையுடையனவாக ஓடுபாதைகள் (Runway) அமைக்கப்படுகின்றன. ஏராளமான விமானங்கள் ஓட வேண்டியிருப்பதால் இவ்வோடு பாதைகள் மிகவும் கெட்டியாக அமைக்கப்படுகின்றன. அதுவும் காற்றடிக்கும் திசைக்கு எதிர்த்திசையை நோக்கி அமைக்கப்படுகின்றன. நீளமாக இருப்பதோடு அகலமாகவும் இவ்வோடு பாதைகள் பெரும்பாலும் கான்கிரீட்டினாலேயே அமைக்கப்படுகின்றன. சில விமானதளங்களில் ஒன்றுக்கு மேற்பட்ட விமான ஓடு பாதைகள் இருக்கும்.

விமானங்கள் பகலிலும் இரவிலும் வந்து செல்கின்றன. இரவில் இறங்கி, ஏறும் விமானங்கள் எளிதாக ஓடு பாதையை அறியும் வகையில் ஓடுபாதை நெடுகிலும் இரு மருங்குகளிலும் பளிச்சிடும் வண்ண விளக்குகள் பொருத்தப்பட்டிருக்கும். எனினும் ஓடு பாதை முழுவதிலும் ஒரேவித வண்ண விளக்குகள் எரிவதில்லை. எந்த இடத்தில் எவ்வகை வண்ண விளக்கு ஒளிர வேண்டும் என்பதற்கு