பக்கம்:இளையர் அறிவியல் களஞ்சியம்.pdf/301

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

விமானம் 91

291

அன்று ஓரிருவர் அமரக்கூடிய மர விமான முயற்சி தொடர்ந்ததன் விளைவாக இன்று

நூற்றுக்கணக்கானோர் பயணம் செய்யவல்ல மிகப்பெரும் விமானங்கள் உருவாகலாயின.

மரச்சட்டத்தில் தொடங்கிய விமானங்கள் இன்று அலுமினியம், தாமிரம், மெக்னீசியம், மாங்கனீஸ் போன்ற உலோகங்களின் கலவையான 'டியூராலுமினியம்’ எனும் புதுவகை உலோகத்தைக் கொண்டு உருவாக்கப்படுகின்றன. இவ்வுலோகம் கடினத்தன்மை மிக்கதாக விளங்குவதோடு எடை குறைந்ததாகவும் இன்று உள்ளது.

விமானம் பல்வேறு உறுப்புகளைக் கொண்டு இயங்குகிறது. அவற்றுள் மிக முக்கிய உறுப்பாக அமைந்திருப்பது 'புரோப்பெல்லர்’ என்று அழைக்கப்படும் செலுத்திகளாகும். காற்றாடிப்பட்டை வடிவில் இருக்கும். இவ்வுறுப்பு விசையோடு சுழலும்போது உண்டாகும் காற்றை வால் பகுதியை நோக்கி விரைந்து தள்ளுகிறது. இதனால் இக்காற்று விசைக்கு ஓர் எதிர்விசை உருவாகிறது. விமானத்தை முன்னோக்கித் தள்ளிச் செலுத்துவது இவ்விசையே யாகும். விமானம் மேல்நோக்கிப் பறக்கவோ அல்லது கீழ்நோக்கி இறங்கவோ உறுதுணையான உறுப்பு விமானத்தின் மையப் பகுதியில் இருபுறமும் விரிந்திருக்கும் இறக்கைகளாகும். விமானம் மேல் எழும்ப அல்லது கீழ் இறங்க அல்லது பக்கவாட்டில் திரும்ப உதவுவது விமானத்தின் வால் பகுதியாக அமைந்திருக்கும் எய்லிரான் (Aileran) எனும் நிலைப் படுத்தியாகும். விமானத்தின் வால்பகுதியில் இருபுறமும் சிறிய அளவில் விரிந்திருக்கும் 'எலிவேட்டர்’ எனும் உயர்த்தியை இயக்கி