பக்கம்:இளையர் அறிவியல் களஞ்சியம்.pdf/309

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வெப்ப இரத்தப் பிராணிகள்

299

அளந்து வந்தோம். தற்போது கெல்வின் என்ற அளவு முறை உலகளாவிப் பரவி வருகிறது.

நமது உடலின் வெப்பநிலையை 370 செல்சியஸ் = 98.4 ஃபாரன்ஹீட் = 310 கெல்வின் என்று கூறலாம்.

ஒரு நாளின் உயர்ந்த-தாழ்ந்த வெப்பநிலைகளைக் கண்டறிய உச்ச-நீச வெப்பமானி பயன்படுகிறது.

உடலின் வெப்ப நிலையை அளக்க வெப்ப மானியை சிறிது நேரம் வாயினுள்ளோ அல்லது கக்கத்திலோ வைத்துப் பார்பபர்கள். மேலேறிய பாதரசம் மீண்டும்குமிழுள் இறங்காது உடலின் வெப்ப நிலையை உடனடியாகவோ அல்லது சிறிது நேரம் தாழ்த்தியோ பார்க்க இயலும். பாதரசம் மறுபடியும் குமிழுள் இறங்க வெப்பமானியைச் சற்று பலமாக உதற வேண்டும்.

வெப்பம் மிகுந்த பகுதிகளில் பாதரசத்தையும் குளிர்ச்சி மிகுந்த துருவப் பகுதிகளில் உறைநிலை மிகுந்த ஆல்கஹாலையும் வெப்ப மானியில் பயன்படுத்தி வெப்பநிலைகளை அறிகின்றனர்.

ஓர் உலோகச் சுருள் வெப்பமானியும் புழக கத்தில் உண்டு. ஓர் உலோகச் சுருளின் மின் தடை வெப்பநிலை சார்ந்தது. எனவே, மின் தடை மாற்றத்தின் மூலம் உயர்வெப்ப நிலைகள் அளவீடு செய்யப்படுகின்றன. மேலும், திரவப் படிகங்கள் (Liquid Crystals) ஆகியவற்றின் மூலம் வெப்பநிலை அளவீடுகள் நடைபெறுகின்றன.


வெப்ப இரத்தப் பிராணிகள் : சாதாரணமாக நம் உடலின் வெப்பநிலை 98.40 ஃபாரன் ஹீட் ஆகும். எவ்வளவு உயர்ந்த அளவு வெப்பம் அல்லது குளிர் உள்ள பகுதிகளில் இருந்தாலும் நம் உடம்பு இதே வெப்பநிலையைக் கொண்டே இருக்கும். அதேபோன்று வேறுசில பிராணிகட்கும் அதிகபட்ச வெப்ப அல்லது குளிரால் பாதிக்காமல் நம்மைப் போலவே நிலையான உடல் வெப்ப நிலையைப் பெற்றுள்ளன. இவையே 'வெப்ப இரத்தப் பிராணிகள்’ என அழைக்கப்படுகின்றன. குதிரை. நாய், பூனை போன்ற பிராணிகள் வெப்ப இரத்தப் பிராணிகள் ஆகும்.

வேறு சிலவகைப் பிராணிகள் சுற்றுப் புறத்தில் உள்ள வெப்ப குளிர் நிலைகளுக்கேற்ப

வெப்ப இரத்தப் பிராணிகள்

தங்கள் உடலின் வெப்ப நிலையில் ஏற்ற, இறக்கங்களைப் பெறுகின்றன. இவை குளிர் இரத்தப் பிராணிகளாகும். இதற்குப் பாம்பு,