பக்கம்:இளையர் அறிவியல் களஞ்சியம்.pdf/323

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஹைட்ரஜன்

313

இருக்கும்போது சுழலியின் மேல் தூக்கும் சக்தியும் பூமியின் ஈர்ப்புச் சக்தியும் சம நிலையில் இருக்கும். ஹெலிகாப்டரை கீழே இறக்க வேண்டுமெனில் மேலே சுழலும் சுழலியின் வேகத்தைக் குறைத்தால் ஹெலிகாப்டர் மெதுவாக இறங்கித் தரையைச் சென்றடையும்,

வானில் விமானங்கள் வேகமாகப் பறப்பது போன்று ஹெலிகாப்டர்களால் பறக்க இயலாது. அதிகபட்சம் மணிக்கு 150 கிலோ மீட்டர் வேகத்தில் தான் பறக்க முடியும். இதற்குச் செலவாகும் எரிபொருளின் விலையும் அதிகம். ஹெலிகாப்டரின் விலையும் சற்று அதிகமே.

ஹெலிகாப்டர்களால் பல நன்மைகள் உண்டு. விமானங்களால் எளிதில் செல்ல முடியாத இடங்களுக்கு ஹெலிகாப்டர்களால் சுலபமாகச் செல்ல முடியும். விமானங்களுக்குத் தேவைப்படுவது போன்று நீண்ட ஓடு பாதைகள் ஹெலிகாப்டர்களுக்குத் தேவையில்லை. மேலும், மிகச் சிறிய இடப்பரப்பில் கூட ஹெலிகாப்டர்களால் இறங்க முடியும். சாதாரணமாகப் போரில் காயமடைந்த வீரர்களையும் வெள்ளப்பெருக்குப் போன்ற இயற்கை இடர்களால் பாதிக்கப்பட்டவர்களையும் ஹெலிகாப்டர்களால் எளிதாக அப்புறப்படுத்திக் காக்க முடியும். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு, மருந்து உடைகளை உடனுக்குடன் கொண்டு சேர்க்க முடியும். தேவையானபோது உணவுப் பொருட்களை மட்டுமின்றி ஜீப் போன்ற வாகனங்களையும் வேறு பொருட்களையும்கூட ஹெலிகாப்டர்களால் தூக்கிச் செல்ல முடியும். குறுகிய தூரங்களுக்கு விரைந்து சென்று வர ஹெலிகாப்டர்களே சிறந்த வாகனங்களாகக் கருதப்படுகின்றன. சில சிக்கலான சமயங்களில் தபால்களை எடுத்துச் செல்லவும் ஹெலிகாப்டர் பயன்படுத்தப்படுவதுண்டு. பூச்சிகளால் பயிர்கள் பாதிப்படையும்போது அதற்கென வடிவமைக்கப்பட்ட ஹெலிகாப்டர்கள் மூலம் பூச்சி மருந்தும் தெளிக்கப்படுகிறது.

ஹெலிகாப்டர் வடிவமைப்புப்பற்றிய சிந்தனை உலகப் புகழ்பெற்ற ஓவியர் லியோனார் டோ டா வின்சிக்கு 1500ஆம் ஆண்டில் எழுந்தது. அவர் கற்பனையாக அதன் வடிவத்தைத் தீட்டினார். ஆயினும், நீண்ட காலம் அறிவியல் வளர்ச்சியின்மை காரணமாக அக்கற்பனையும் சிந்தனையும் வெறும் ஓவிய வடிவத்திலேயே இருக்க நேர்ந்தது. 1910ஆம் ஆண்டிலேதான் முதன் முதலாக ஈகாரி சிகார்ஸ்கி எனும் ரஷ்ய அறிவியலறிஞரும் ஃபிரெஞ்சு இயந்திர நுட்பவியல் மேதையுமான லூயி சார்லஸ் பிராகுவே என்பவரும் இணைந்து இயந்திரத்தோடு கூடிய ஹெலிகாப்டரை வடிவமைத்து உருவாக்கினர். அவர்களின் தொடர் முயற்சி 1988-40 ஆண்டுகளில் வெற்றி பெற்றது. இன்று நாம் காணும் ஹெலிகாப்டர் வடிவமைப்பின் அடிப்படையில் உருவாக்கம் பெற்றது. இன்று சமூக வாழ்வில் மட்டுமல்ல போர்ப்படையிலும் ஹெலிகாப்டர்கள் மிக முக்கிய இடத்தை வகிக்கின்றன. ஹெலிகாப்டர்கள் பல வடிவங்களில் சிறிதும் பெரிதுமாக பல அளவுகளில் உருவாக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருகின்றன.


ஹைட்ரஜன் : ஹைட்ரஜன் வாயு காற்றை விட எடை குறைந்த வாயுவாகும். அதாவது ஹைட்ரஜனைப்போல் 14-1/2 மடங்கு அதிக எடையுள்ளது காற்று எனக் கணக்கிட்டுள்ளனர். ஹைட்ரஜன் வாயு வடிவில் உள்ள முக்கியத் தனிமம் ஆகும். இதன் அணு நிறை 1.0078 ஆகும். இதன் வேதியியல் குறியீடு H2 ஆகும்.

ஹைட்ரஜன் தனிமத்தை முதன்முதலில் கண்டறிந்தவர் காவண்டிஷ் எனும் அறிவியல் அறிஞராவார். எனினும் இதற்கு ‘ஹைட் ஜன்’ எனும் பெயரைச் சூட்டியவர் லாவாசியர் எனும் அறிவியல் ஆய்வாளர் ஆவார். இதற்கு ‘நீரை உண்டாக்கும் பொருள்’ என்பது பொருளாகும். ஹைட்ரஜனை எரித்து நீரைப் பெறமுடியும்.

ஹைட்ரஜன் வாயு இயற்கையாக நம்மைச் சுற்றிலும் தனியே இருப்பதில்லை. ஆனால், கதிரவனைச் சுற்றி அதிக அளவில் சூழ்ந்துள்ளதாக விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளார்கள். சாதாரணமாக ஹைட்ரஜன் வாயு நீரிலும் தாவரப் பொருட்களிலும் எண்ணெய் வகைகளிலும் மற்றும், கரிம வேதியியல் பொருட்களிலும் மிகுதியாக உண்டு. எண்ணெய்க் கிணறுகளிலிருந்து வெளிப்படும் இயற்கை வாயுவில் ஹைட்ரஜன் கலந்திக்கும். எரி நட்சத்திரங்களிலும் இஃது கலந்துள்ளதாகக் கண்டறிந்துள்ளார்கள்.

மணமோ, சுவையோ, நிறமோ இல்லாத ஹைட்ரஜன் வாயு பிற பொருட்கள் எரியத் துணை செய்வதில்லை. இதனை ஆக்சிஜ