பக்கம்:இளையர் அறிவியல் களஞ்சியம்.pdf/43

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அலெக்சாண்டர் ஃபிளெமிங்

33

தோருக்குப் பாடம் புகட்டுவதில் வல்லவராக விளங்கினார். திருத்தமாகப் பேசி குரல் உறுப்புப், பயிற்சி தருவதில் தனித்திறமை பெற்றவர். எனவே கிரஹாம் பெல் இளமை தொட்டே

அலெக்சாண்டர் கிரஹாம் பெல்

குரல் ஒலிகளை மீண்டும் ஒலிக்கச் செய்வதில் பேரார்வமுடையவராக இருந்தார். இதற்கான

1892இல் பெல் நியூயார்க் சிகாகோ தொலைபேசித் தொடர்பைத் தொடங்கி வைக்கிறார்

ஆய்வுச் சிந்தனை அவருக்கு எப்போதும் இருந்து வந்தது.

இவர் அமெரிக்காவில் உள்ள பாஸ்டன் நகரில் 1871ஆம் ஆண்டு குடியேறினார். அங்கும் இவர் தன் ஆராய்ச்சியை முனைப்புடன் செய்து வரலானார். பெரும் உழைப்புக்கும் முயற்சிக்கும் பின்னர் 1875ஆம் ஆண்டில் தொலைபேசியை முதன்முதலாகக் கண்டுபிடித்தார். இன்றையத் தொலைபேசிக்கான அடிப்படை வடிவமைப்பை அன்றே உருவாக்கினார்.

அவரது ஆய்வு முயற்சி மேலும் தொடர்ந்தது. அவர் செவிடர்களுக்குக் காதுகேட்க உதவும் கருவியைக் கண்டுபிடிப்பதில் பெரும் முனைப்புக் காட்டினார். இதற்கு வேறொரு சிறப்புக் காரணமும் இருந்தது. அவரது துணவியார் காதுகேளாதவர். எனவே, முயன்று காது கேட்க உதவும் கருவியைக் கண்டுபிடிப்பதில் பெரும் முயற்சி செய்தார். 1922ஆம் ஆண்டில் கிரஹாம் பெல் காலமானார்.

அலெக்சாண்டர் ஃபிளெமிங் : பெனிசிலின் எனும் அரிய மருந்தைக் கண்டுபிடித்தவர் அலெக்சாண்டர் ஃபிளெமிங் ஆவார். இது சில நோய் நுண்மங்களின் வளர்ச்சியைத் தடை செய்யும் மருந்தாகும்.

இவர் ஸ்காட்லாந்திலுள்ள லாக் ஃபீல்டு எனுமிடத்தில் 1881ஆம் ஆண்டு பிறந்தார். லண்டனில் உள்ள புனித மேரி மருத்துவமனையைச் சார்ந்த மருத்துவப்பள்ளியில் பயின்று மருத்துவப் பட்டம் பெற்றார். பின்னர் இவர் தொற்று நோய்த் தடைகாப்பு ஆராய்ச்சியில் ஈடுபட்டார்.

இரண்டாம் உலகப்போர் தொடங்கியவுடன் இராணுவமருத்துவராகப்பணியாற்றினார். போரின்போது காயம்படும் போர் வீரர்களுக்கு ஏற்படும் தொற்று நோய்கள் பற்றி ஆராய முற்பட்டார். நோய் நுண்மத் தடை மருந்துகளில் (Antiseptics) பல நோய் நுண்மங்களுக்குத் (Microbes) தீங்கு செய்வதைவிட அதிகமாக உடலின் உயிரணுக்களுக்குத் (Bodycells) தீங்கு விளைவிக்கின்றன என்பதைக் கண்டறிந்தார். நோய் நுண்மங்களுக்கு தீங்கு உண்டாக்குகிற, அதேசமயம் உயிரணுக்களுக்கு தீங்கு ஏற்படுத்தாத ஒரு பொருளைக் கண்டுபிடிக்க வேண்டியதன் அவசர