பக்கம்:இளையர் அறிவியல் களஞ்சியம்.pdf/45

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அவிசென்னா

35

அலைகள் உருவாகக் காற்றைவிட வேறு காரணங்களும் உள்ளன. வானில் உள்ள சூரியனும் சந்திரனும் பூமியைத் தம்பால் ஈர்க்கின்றன. இந்த ஈர்ப்பு விசையே அலைகள் உருவாகக் காரணமாகின்றது. பௌர்ணமி அன்றும் அமாவாசை அன்றும் கடலில் பேரலைகள் ஏற்பட கடல் கொந்தளிப்பு உண்டாகும். இதற்குக் காரணம் அன்று சூரியனின் ஈர்ப்பு விசையும் நிலவின் ஈர்ப்பு விசையும் ஒரே சமயத்தில் அமைவதால் அலைகளும் பெருமளவில் எழுகின்றன; இச்சமயங்களில் தென்னை மர உயரத்திற்குக் கடல் அலைகள் எழும்புவது உண்டு.

நில அதிர்ச்சி உண்டாகும்போதும் பூகம்பம் ஏற்படும்போதும் கடலுக்கு அடியில் உள்ள எரிமலைகள் வெடித்தாலும் கடல் கொந்தளிப்பு ஏற்படும். அப்போது கடல் அலைகளின் ஆர்ப்பரிப்பும் அதிகமாக இருக்கும்.

கடல் அலைகளைக் கொண்டு மின் உற்பத்தி செய்யும் புதிய அறிவியல் நுட்பம் கண்டறியப் பட்டுள்ளது. புனல், அனல், அனு மின் உற்பத்திக்கு அடுத்தபடியாக கடல் அலைகள் மூலமே அதிக மின்சாரம் தயாரிக்க முயற்சிகள்

அலைகள்

மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சில நாடுகள் அலைகள் மூலம் மின் உற்பத்தி செய்து பயன்பெற்று வருகின்றன. நம் நாட்டிலும் அத்தகைய முயற்சிகள் மேற்கொள்ளப் பெற்று வருகின்றன.

அவிசென்னா : 'இப்னு ஸீனோ’ எனும் பெயரே ‘அவிசென்னா’ என மருவி வழங்குகிறது. இவரது இயற்பெயர் ஹசைன் என்பதாகும். இவர் சுமார் ஆயிரம் ஆண்டுகட்கு முன்பு வாழ்ந்த மாபெரும் மருத்துவ மேதையும் அறிவியல் விற்பன்னருமாவார்.

கி.பி. 980ஆம் ஆண்டில் பாரசீக நாட்டில் பல்க் எனும் பகுதியில் பிறந்த இவர் பதினெட்டு வயதை எட்டு முன்னரே மருத்துவப் பணியை மேற்கொண்டார். நோயாளிகளின் நோய்களைக் கண்டறிவதிலும் அவர்கட்கு உரிய மருந்துகளைத் தந்து மருத்துவம் பார்ப்பதிலும் திறமை மிக்கவராக விளங்கினார்.