பக்கம்:இளையர் அறிவியல் களஞ்சியம்.pdf/50

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

40

ஆக்சிஜன்

மனிதர்களுக்கோ அல்லது பிராணிகளுக்கோ உணவைப் பார்த்த மாத்திரத்திலேயே வாயில் உமிழ் நீர் சுரக்கும். இது இயல்பான உடன் பிறந்த அனிச்சைச் செயலாகும். ஒரு குறிப்பிட்ட நேரத்தில் மணியடித்து உணவு தரும் பழக்கத்தை ஒரு நாய்க்கு சில நாட்கள் தொடர்ந்து ஏற்படுத்தினால், அது அதற்குப் பழக்கமாக ஆகிவிடுகின்றது. அந்தக் குறிப்பிட்ட நேரத்தில் மணி அடித்த உடனேயே உணவைக் கண்ணால் காணாமலே நாய்க்கு வாயில் உமிழ் நீர் சுரக்கும், மணி அடித்தால் சோறு கிடைக்கும் என்பதை அனுபவத்தில் அறிந்திருப்பதே இதற்குக் காரணம். மணியோசை அதன் அனுபவம். இவ்வாறு பல முறை மணியடித்து உணவு வழங்காமல் விட்டு விட்டால் இந்த அனுபவ உணர்வும் அந்நாயை விட்டு நீங்கிவிடும். இதிலிருந்து இயல்பு அனிச்சைச் செயல் நிலையானது என்பதையும் அனுபவ அனிச்சைச் செயல் நிலையில்லாதது என்பதையும் உணர முடிகிறது.

நம் அன்றாட வாழ்வில் எண்ணற்ற அனிச்சைச் செயல்களைச் செய்கிறோம். சூழ்நிலை, தொடர்ச்சியான அனுபவம் ஆகியவற்றின் அடிப்படையில் அமைய அனிச்சைச் செயல்களைச் செய்கிறோம்.


ஆக்சிகரணம் : இதனை ஆக்சிஜனேற்றம், (Oxidation) என்றும் கூறுவர். மக்னீசியம் காற்றில் எரியும்போது அது காற்றிலுள்ள ஆக்சிஜனுடன் கூடி மக்னீசிய ஆக்சைடைத் தருகிறது. இங்கு மக்னீசியம் ஆக்சிஜனேற்றம் அடைகிறது. எனவே ஒரு பொருள் ஆக்சிஜனுடன் கூடுவதை ஆக்சிஜனேற்றம் என்கிறோம். ஆக்சிஜன் எதிர்மின் தன்மையுடைய தனிமமாகும். எனவே, எதிர்மின் தன்மையுடைய தனிமம் ஒரு பொருளுடன் சேருவதும் ஆக்சிஜன் ஏற்றமாகும். ஒரு சேர்மம் அல்லது கூட்டுப் பொருளிலிருந்து ஹைட்ரஜன் விலக்கப்படுவதை ஆக்சிஜனேற்றம் என்கிறோம். ஹைட்ரஜன் நேர் மின் தன்மை கொண்ட தனிமமாகும். எனவே ஒரு கூட்டுப் பொருளிலிருந்து விலக்கப்படுவதையும் ஆக்சிஜனேற்றம் என்கிறோம்.

சுருங்கக் கூறின் ஆக்சிஜன் சேர்ப்பு, எதிர் மின் உறுப்பு அதிகரிப்பு, ஹைட்ரஜன் நீக்கம், எலெக்ட்ரான் இழத்தல் ஆகியவை ஆக்ஸிஜன் ஏற்றமாகும். ஆக்சிஜன் ஏற்றத்திற்கு துணைபுரியும் பொருட்கள் ஆக்சிஜனேற்றிகளாகும்.

ஆக்சிஜன் : நாம் அடிக்கடி காற்றை உள்ளே இழுத்து சுவாசிக்கிறோம். நாம் உள்ளிழுக்கும் காற்றில் பல வாயுக்கள் அடங்கியுள்ளன. அவற்றில் 21 விழுக்காடு ஆக்சிஜன் வாயு அடங்கியுள்ளது. இது நாம் உயிர்வாழ இன்றியமையாது தேவைப்படும் வாயுவாகும். இது 'பிராணவாயு', 'உயிர்வளி’, ‘உயிரகம்’ என்றெல்லாம் பல்வேறு பெயர்களில் தமிழில் அழைக்கப்படுகிறது. தொடக்கத்தில் அமிலமாக்குதல் என்னும் பொருள்பட ஆக்சிஜன் என்ற பெயர் கையாளப்பட்டது. 1774இல் ஜோசப் பிரிஸ்டிலி என்ற ஆங்கில விஞ்ஞானி இவ்வாயுவைக் கண்டுபிடித்தார்.

மனிதர்கள் மட்டுமல்லாது விலங்கினங்கள் உயிர்வாழவும் ஆக்சிஜன் அவசியமாகிறது. இது நுரையீரலுள் சென்று இரத்தத்தைச் சுத்தப்படுத்துகிறது. நாம் சாதாரணமாகச் சுவாசிக்கும்போது ஆக்சிஜனை உள்ளே இழுத்து கார்பன்டை ஆக்சைடு எனும் கரியமில வாயுவை வெளியிடுகிறோம். இவ்வாயு தாவரங்கள் உயிர்வாழ அவசியமாகின்றது. நீரினுள் வாழும் மீன் போன்ற நீர்வாழ் உயிரினங்கள் நீரில் கரைந்துள்ள ஆக்சிஜனை சுவாசித்து உயிர்வாழ்கின்றன.

ஆக்சிஜன் ஒரு தனிமம் ஆகும். உலகில் மிக அதிகமாகக் கிடைக்கும் தனிமம் இதுவேயாகும். உயிரினங்கள் சுவாசிப்பதற்கு மட்டுமல்லாது பல்வேறு வேதியியல் வினைகள் நிகழ இவ்வாயு காரணமாக அமைகிறது. ஆக்சிஜன் வாயுவைக் காற்றிலிருந்து தனியே பிரித்தெடுக்கவும்.

ஆக்சிஜனுக்கு மணமோ, நிறமோ, சுவையோ இல்லை. அதிக வெப்பத்தில் ஆக்சிஜன் திரவமாக மாறும். காற்றில் ஆக்சிஜன் அளவு குறைவதே இல்லை. காரணம் தாவரங்கள் நாம் வெளிவிடும் கார்பன்டை ஆக்சைடை சுவாசித்து ஆக்சிஜனை வெளியிட்டு காற்றில் ஆக்சிஜன் அளவைச் சமனப்படுத்தி வருவதேயாகும். இச்செயல் 'ஒளிச்சேர்க்கை’ என்று அழைக்கப்படுகிறது. காற்று மண்டலத்தில் உள்ள கலவையில் ஐந்தில் ஒரு பங்கு தனிம ஆக்சிஜன் உள்ளது.

ஆக்சிஜன் இரும்பு, கந்தகம் போன்ற பிற தனிமங்களுடன் கூட்டுச் சேரும்போது ஆக்சைடு எனும் புதிய கூட்டுப் பொருளை