பக்கம்:இளையர் அறிவியல் களஞ்சியம்.pdf/55

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

 ஆம்பியர்

45

இதன் மூலம் நான்கு இந்திய நகரங்களில் உள்ள மாணவர்கட்கு உயர் தொழில்நுட்பக் கல்வி அளிக்கப்பட்டது. பல்வேறு இடங்களிலிருந்த கணிப்பொறிகள் ஒருங்கிணைக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டன. குடியரசு நாள் விழாவும் பிரதமரின் வெளிநாட்டுப் பயண திகழ்ச்சிகளும் நாடெங்கும் ஒளிபரப்பப்பட்டன. இதன் மூலம் இந்திய ஒருமைப்பாட்டு உணர்வு மக்களிடையே வலுப்படஏதுவாயின. இவை ஆப்பிள் செயற்கைக்கோளின் சாதனைகளாகும்.

அடுத்தடுத்து மேற்கொள்ளப்பட்ட விண்வெளி செயற்கைக்கோள் தொலைத் தொடர்பு திட்டங்களை வகுக்க வழியமைத்த பெருமை இச்செயற்கைக் கோளுக்கு உண்டு.

ஆப்பிள் பழம் : நாம் விரும்பி உண்ணும் பழங்களுள் ஆப்பிள் பழமும் ஒன்று. இது ஒரு மரக் கனியாகும். இஃது நீண்ட நெடுங்காலமாக உலகத்தில் பல பாகங்களில் பயிரிடப்பட்டு வருகிறது. குளிரான பகுதிகளிலேயே

ஆப்பிள்பழம்

ஆப்பிள் செழிப்பாக விளைகிறது.இந்தியாவில் காஷ்மீர் பகுதியிலும் தென்னகத்தில் பெங்களுரிலும், நீலகிரியிலும் ஆப்பிள் பழம் விளைகிறது. ஆப்பிள் மரத்திற்கு ஆண்டு முழுவதும் குளிரான நிலை அவசியமாகும். பகலில் ஓரளவு வெப்பமும் இரவில் நல்ல குளிரும் தேவை.

தொடக்கத்தில் காடுகளில் தானாக வளர்ந்து வந்தது. பின்னர், பழத்தின் சுவையறிந்த மனிதர்கள் அதனைத் தாங்கள் விரும்பிய இடங்களில் பயிரிடலாயினர். ஆப்பிளில் ஆயிரக்கணக்கான வகைகள் உண்டு. இவை பழத்தின் சுவை, நிறம், வடிவம் ஆகியவற்றைப் பொருத்தமையும். இவற்றுள் பத்து அல்லது பன்னிரண்டு வகைகளே உண்ணத்தக்க நல்ல சுவையுள்ளவை. மற்றவை சுவை குறைந்தவை; புளிப்புச்சுவை உள்ளவை.இவற்றை வேகவைத்தும் உண்பர். புளிப்பு ஆப்பிள் பழங்கள் மதுவகைகள் செய்யப் பயன்படுகின்றன. நல்ல மண்ணில் ஆழ வேரோடி வளரும் ஆப்பிள் மரங்கள் கனி கொடுக்க நீண்ட காலம் எடுத்துக் கொள்கின்றன. ஒட்டு மாமரம் போன்று ஒட்டு ஆப்பிள் மரங்கள் மூலம் சுவையான பருத்த பழங்களைப் பெறலாம்.

ஆப்பிள் பழங்களைக் காகிதத்தில் சுற்றி நீண்டதுாரப் பகுதிகளுக்கு அனுப்புகின்றனர். ஆப்பிள் பழங்கள் உலர்த்தப்பட்டு ரொட்டி செய்யப் பயன்படுகின்றன. ஆப்பிள் மாவு குழந்தைகளுக்கு உணவாகின்றது. சிலவகை ஆப்பிளிலிருந்து பானங்கள் தயாரிக்கப்படுகின்றன. பழக்குழைவுகளும் ஜெல்லிகளும் செய்யப்படுகின்றன.

ஆப்பிள் பழங்கள் சத்து மிகுந்தவைகளாகும். இதில் மாவுச் சத்து, சர்க்கரை. வெப்ப சக்தி, சுண்ணாம்புச் சத்து, பாஸ்பரம், கரோட்டின் ஆகியவை நிரம்ப உள்ளன.

ஆம்பியர் : மின்காந்தவியல் என்ற அறிவியல் துறையின் தோற்றத்திற்குக் காரணமாயமைந்தவர் ஆம்பியர். இவர் புகழ்பெற்ற ஃபிரெஞ்சு நாட்டு இயற்பியல் அறிவியலாளர் ஆவார்.

முதன்முதலாக அர்ஸ்டெட் எனும் ஆய்வாளர் மின்சாரத்திற்கும் காந்தத் தன்மைக்குமுள்ள

ஆம்பியர்

தொடர்பைக் கண்டுபிடித்தார். இச்செய்தியும் ஆய்வும் ஆம்பியரை வெகுவாகக் கவர்ந்தது. அர்ஸ் டெட் கண்டுபிடிப்பைத் தொடர்ந்து மேன்மேலும் ஆராய்ச்சிகளைச் செய்யலானார். இதன் விளைவாக 'மின்காந்தவியல்’ எனும் ஒரு புதிய துறையே உருவெடுத்தது. இதன் காரணமாக மின்னோட்டத்தை அளந்தறியும் கருவி இவர் பெயராலேயே அழைக்கப்படுகிறது.