பக்கம்:இளையர் அறிவியல் களஞ்சியம்.pdf/59

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆரஞ்சு

49

டும் பறக்கவிட்டபோது 38 மீட்டர் தூரத்தை 59 விநாடிகளில் கடந்து சென்றது. இது மேலும் அவர்கட்கு உற்சாக மூட்டினும் பொதுமக்கள் இம்முயற்சிகளைக் கண்டு ஆர்வமோ அக்கறையோ காட்டவில்லை. மனம் வருந்திய ரைட் சகோதரர்கள் தாங்கள் மேலும் சிறப்பாக உருவாக்கியிருந்த விமானத்

கிட்டி ஹாக் விமானம்

தை பாரிஸ் நகருக்குக் கொண்டு சென்று பறந்து காட்டினர். ஃபிரெஞ்சு மக்கள் அதைக் கண்டு பெருமகிழ்வடைந்தனர். வியந்து போற்றினர். பரிசுகள் பல தந்து பாராட்டினர். இதைப் பார்த்த பிறகே அமெரிக்க மக்களுக்கு ரைட் சகோதரர்களின் அருமையும் பெருமையும் புரியத் தொடங்கியது. அமெரிக்க அரசும் மக்களும் ரைட் சகோதரர்களின் முயற்சியையும் சாதனையையும் பாராட்டியதோடு தேவையான உதவிகளையும் தர முன் வந்தனர். 1906ஆம் ஆண்டு ரைட் சகோதரர்கள் தங்கள் பெயரில் விமான உற்பத்தித் தொழிற்சாலை ஒன்றைத் தொடங்க அமெரிக்க அரசு அனுமதியும் உதவியும் வழங்கியது.

அதன்பின் ரைட்சகோதரர்கள் வடிவமைத்த விமானம் பல்வேறு வடிவ மாற்றங்களைப் பெற்று இன்றுள்ள அதி நவீன உருவைப் பெற்றுள்ளது. இன்றைய விமானத் துறை வளர்ச்சிக்கு அன்றே அழுத்தமான, ஆழமான அடிப்படையை அமைத்துத் தந்த பெருமை ரைட் சகோதரர்களையே சாரும்.

ஆரஞ்சு : ஆப்பிள் பழத்தைப் போல சுவை தரும் கனியாக அமைந்திருப்பது ஆரஞ்சு பழமாகும். இதுவும் மரக்கனி வகையே யாகும். இது வெப்ப, மிதவெப்பப் பகுதிகளில் அதிகமாக விளைகிறது, ஆரஞ்சு மரம் குட்டையாக புதர்போன்று அடர்த்தியாக இருக்கும். மென்மையான இலைகளையும் சிறிய வெண்மை நிறப் பூக்களையும் உடையது. இப்பூக்கள் ஒருவகை மணமுள்ளவை, ஆரஞ்சு என்பது ஒரு நிறத்தைக் குறிக்கும் பெயராக அமைந்திருப்பினும் ஆரஞ்சுப் பழங்கள் சிறு சிறு நிற வேறுபாடுகளுடன் காணப்படுகின்றன. இதன் மேல் தோல் உள்ளே இருக்கும் பழச்சுளைகளுடன் ஒட்டியும் ஒட்டாமலும் இருக்கும். இதனால் பழத்தை எளிதாக உரிக்க இயலும். சுளையாகவும் சாப்பிடலாம். சாறாகப் பிழித்தும் அருந்தலாம்.

ஆரஞ்சுப் பழம் ஆண்டு முழுமையும் விளையக்கூடியது. ஒரு மரம் ஆண்டுக்குச் சராசரியாக ஆயிரம் பழங்கள் தரும். அறிவியல் ஆய்வின் விளைவாக ஒட்டு முறையில் புதிய கலப்பின வகைகள் உருவாக்கப்பட்டு வருகின்றன. இதன் மூலம் மிக அதிகமான விளைச்சலும் நிறைய சாறும் பெறமுடிகின்றது; சுவையும் கூடுதலாக உள்ளது. இக்கலப்பினங்கள் அளவிலும் வடிவிலும் நிறத்திலும் மணத்திலும்கூட வேறுபடுகின்றன.

ஆரஞ்சுப் பழத்தின் அனைத்துப் பகுதிகளுமே பயன்படுகின்றன, இதன் மணமுள்ள