பக்கம்:இளையர் அறிவியல் களஞ்சியம்.pdf/61

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆல்காக்கள்

51

படுத்தப்படுவதைப் பார்த்திருக்கலாம். இந்த விளக்கு எரியப் பயன்படும் ஒருவகை ஆல்கஹால்கள் 'எரிசாராயம்’ என அழைக்கப்படுகிறது.

ஆல்கஹால்கள் தனியாக இயற்கையில் கிடைப்பதில்லை. கரிம வேதியியல் மூலம் பெறும் ஒருவகைக் கூட்டுக்களாகும். இவை அமிலங்களுடன் சேர்ந்த எஸ்டர்களாகவே கிடைக்கின்றன.

சாதாரணமாக அரிசி, பார்லி, சோளம் போன்ற தானியங்களிலிருந்து ஒருவகை ஆல்கஹால்கள் தயாரிக்கப்படுகின்றன. இவ்வாறு தயாரிக்கப்படுபவை தானிய ஆல்கஹால் அல்லது ஈதைல் ஆல்கஹால் என அழைக்கப்படுகிறது. இஃது நிறமற்றது; நறுமணமிக்கது. போதைதரும் திரவங்களான விஸ்கி, பீர் போன்றவற்றில் சேர்க்கப்படுகிறது. இதற்குப் பொருள்களைக் கரைக்கும் தன்மை அதிகம். நீரில் கரையாதப் பொருள்களை இதில் போட்டால் கரைந்து விடும். இதனால் மருந்து தயாரிப்பில் ஆல்கஹால்கள் அதிகம் பயன்படுத்தப்படுகின்றன. மேலும், சாயப்பொருள்கள், வாசனைத் திரவியங்கள், வண்ணப் பொருள்கள், மெழுகுத்துணி போன்றவைகளும் ஆல்கஹால்களின் துணைகொண்டு தயாரிக் கப்படுகின்றன. ரப்பரைத் தொகுப்பு முறையில் தயாரிக்கவும் மிகுதியாகப் பயன்படுத்தப்படுகிறது. இவை மேலும் மெருகு எண்ணெய், நகப்பூச்சு வண்ணக்கலவைகள், செயற்கைத் தோல், நச்சு நீக்கிகள், பூச்சிக் கொல்லிகள் தயாரிப்பிலும் இஃது பயன்படுத்தப்படுகிறது.

வாலை வடித்த மது வகைகளிலும் வாலை வடிக்கப்படாத மதுபானங்களிலும் குறிப்பிட்ட அளவு எத்தனால் ஆல்கஹால் உள்ளது. இம் மதுவகைகளை உட்கொண்டால் உடலில் ஒரு வித புத்தெழுச்சி உணர்வுகள் உண்டாகும். தொடர்ந்து உட்கொண்டால் நரம்பு மண்டலம் பெரும் பாதிப்புக்கு ஆளாகும். ஈரல், இரைப்பை முதலியவற்றில் புண்கள் உண்டாகும். அவை விரைவில் கெட்டுவிடும். இத்தகைய ஆல்கஹால் மீது அரசு அதிக வரிகளை விதிக்கிறது.

அதே சமயம் தொழிற்சாலைகளுக்கும் சோதனைச் சாலைகளுக்கும் தேவைப்படும் ஆல்கஹால் வரியின்றி கிடைக்கிறது. ஆனால் இத்தகைய ஆல்கஹாலும் ஃபார்மவின், மெத்தனால், பிரீடின் போன்ற நச்சுப் பொருள்கள் கலக்கப்பட்டு, அருந்தத் தகுதியற்றதாக ஆக்கப்பட்டு விடுகின்றது.

பெட்ரோல் பற்றாக்குறையாக உள்ள நாடுகளில் ஆல்கஹாலுடன் ஈதர், பென்சீன் போன்றவற்றைக் கலந்து உள்எரி எஞ்சினை இயக்கி வாகனங்களை ஒட்டுகின்றனர். இது திறன் ஆகஹால் என்று (Power Alcohol) அழைக்கப்படுகிறது.

ஆல்காக்கள் : இது ஒரு இலத்தின் மொழிச் சொல்லாகும். இதற்குக் 'கடற்பாசி' என்பது பொருளாகும். இது கடலில் மட்டுமல்லாது குட்டைகளிலும் நீர்நிலைகள் மற்றும் ஈரமான இடங்களிலும் காணப்படும் ஒருவகைப் பாசியாகும். இது ஓரணுத் தாவரமாகும். இவை பல வண்ணங்களில் காணப்படுகின்றன. சில நீலப் பச்சையாகவும் மற்றும் சில பழுப்பு வண்ணத்திலும் மற்றும் சில சிவப்பு நிறத்திலும் காணப்படுகின்றன.

சில குறிப்பிட்ட பருவகாலங்களில் இவை மிக அதிகமாக வளர்ச்சிபெறும். செங்கடல் சிவப்பாகத் தோன்றக் காரணம் இப்பாசிகள் சிவப்பாக இருப்பதே என்று கூறப்படுகிறது. இந்தியாவில் குஜராத் கடற்பகுதிகளிலும் இராமேஸ்வரம் கடற்பகுதியிலும் மிகுதியாக கடற்பாசிகள் வளர்கின்றன. கடற்பகுதிகளில் இவை வளருவதால் இவை 'கடற்பாசி’ (Sca

ஆல்காக்கள்

weed) எனும் பெயரைப் பெறுகின்றன. இவற்றில் பச்சையம் (Chlorophyl) இருப்பதால் கதிரவனின் ஒளிக்கதிர்களைக் கொண்டு ஒளிச் சேர்க்கை மூலம் வேண்டிய உணவுகளைத் தானாகவே தயாரித்துக் கொள்கின்றன. மற்ற தாவரங்களில் காணப்படுவதுபோல் இவற்றில் இலை, வேர், பூ, என எந்தப் பகுதியும் இல்லை. இக்கடற்பாசிகளை மீன் முதலான