பக்கம்:இளையர் அறிவியல் களஞ்சியம்.pdf/73

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இரத்த அணுக்கள்

63

களுக்கும் திசுக்களால் வெளியேற்றப்படும் கரியமில வாயுவாகிய கார்பன்-டையாக்சைடை நுரையீரலுக்கும் இரத்தமே எடுத்துச் செல்கிறது.

நாம் உண்ணும் உணவு செரிமானம் ஆகும் போது வெளிப்படும் உணவுச் சத்துக்கள் குடலிலிருந்து உட்கவர்தல் மூலம் இரத்தத்தில் கலக்கின்றன. இரத்தம் சுழற்சிமுறை மூலம் திசுக்களை அடையும்போது இச் சத்துப்பொருட்களும் திசுக்களை அடைகின்றன.திசுக்கள் அவற்றை எடுத்துக்கொண்டு செழுமையடைகின்றன. அவ்வாறே நாளமிலாச் சுரப்பிகளால் சுரக்கப்படும்ஹார்மோன்கள் நேரடியாக இரத்தத்தில் கலந்து உடலெங்குமுள்ள திசுக்களுக்குப் போய்ச் சேர்கின்றன. அங்கு அவை வினைபுரிந்து உடலுக்கு வளமூட்டுகின்றன.

அதேபோல, உடலெங்கிலுமிருந்து வெளிப்படும் கழிவுப் பொருள்களை இரத்தமே சுமந்து, கழிவகற்றும் வாயில்களாக அமைந்துள்ள சிறு நீரகம், தோல், நுரையீரல்களுக்குக் கொண்டு செல்கின்றன. சுருங்கச் சொல்வதென்றால் இரத்தம் உடலின் இன்றியமையா போக்குவரத்துக் கருவியாக விளங்கி வருகிறதெனலாம்.

நமது உடலின் வெப்பநிலை ஒரே சீராக இருக்க இரத்தமே பேருதவி புரிகிறது. உடல் ஏதாவது காரணத்தால் நோய்வாய்ப்படும் சமயங்களில் நோயெதிர்ப்பு சக்தியை உடலில் உருவாக்குவதும் இரத்தமேயாகும். நாம் விபத்துக்காளாகும்போது இரத்தப் போக்கு ஏற்பட ஏதுவாகிறது. அச் சமயங்களில் வெளிப்படும் இரத்தம் உறைந்து போவதால் மேற்கொண்டு இரத்தப்போக்கு ஏற்படாமல் போகிறது.

உடலுக்குத் தேவையான பணிகளை இரத்தம் செவ்வனே செய்து வருகின்றது. இரத்தத்தில் இரு முக்கிய அமைப்புகள் உள்ளன. ஒன்று, இரத்தச் செல்கள். மற்றொன்று பிளாஸ்மா எனப்படும் நீர்மப் பொருள். இரத்தச் செல்கள் எனப்படும் இரத்த அணுக்கள் 45 விழுக்காடும் பிளாஸ்மா 55 விழுக்காடும் இருப்பதாகக் கணக்கிட்டுள்ளார்கள்.

இரத்தத்தில் சிவப்பணுக்கள் அதிக அளவில் இருப்பதால் இரத்தமும் சிவப்பு நிறமுடையதாக இருக்கின்றது. (இரத்த அணுக்கள், பிளாஸ்மா தனிக் கட்டுரை காண்க).

இரத்த அணுக்கள் : நம் உடலில் சுழன்று ஒடிக்கொண்டிருக்கும் இரத்தம் சிவப்பு நிறமானது என்பதைக் காயப்படும்போது நம் உடலிலிருந்து வெளிப்படும் இரத்தத்தின் நிறத்திலிருந்து அறிவோம். இது சிறிதளவு பசைத் தன்மை கொண்டதுமாகும். இரத்தம் நீரைவிட அடர்த்தியானது. சராசரி மனிதனின் உடம்பில் ஐந்து லிட்டர் இரத்தம் இருக்கும்.

இரத்தம் சிவப்பு நிறமாக இருப்பதற்கு என்ன காரணம் ? இரத்தம் திரவ வடிவில் உள்ளது. அதில் நுண்மையான திடப்பொருள்கள் சில உள்ளன. இவைகள் இரத்த அணுக்களாகும். இவற்றுள் மிக முக்கியமானது சிற்றணுக்கள், சிவப்பனுக்கள், வெள்ளையணுக்கள், நுண் தட்டுகள் (Platelets) அல்லது தட்டயம்களாகும். இவை நம் இரத்தத்தில் 46 விழுக்காடாகும். பிளாஸ்மா எனப்படும் நிணநீர் நம் இரத்தத்தில் 54 விழுக்காடு உள்ளது. இதில் 90 விழுக்காடு நீர் கலந்துள்ளது. இரத்தக் குழாய்களில் இரத்த அணுக்கள் ஓட இது உதவுகிறது. ஒரு சொட்டு இரத்தத்தில் கோடிக்கணக்கான சிவப்பணுக்கள் உள்ளதால் இரத்தம் பார்ப்பதற்குச் சிவப்பு நிறமாக உள்ளது. சாதாரணமாக நம் உடம்பில் 25 இலட்சம் கோடி சிவப்பணுக்கள் உள்ளதாகக் கணக்கிட் டுள்ளார்கள்,

இரத்தச் சிவப்பணுக்கள்

சிவப்பணுக்கள் ஒவ்வொன்றும் உட்குழிந்த வட்டத்தட்டுகள் போன்று காணப்படும்.இவற்றின் குறுக்களவு 7.5 மில்லி மைக்ரான். இதன் தடிப்பு 2 மி.மைக்ரான். இதன் மையச் சுற்றளவு 1மி.மைக்ரான். இதன் வெளிப்புறம் தடித்தும் உட்புறம் மென்மையாகவும் இருக்கும். இச் சிவப்பணுக்களைச் சுற்றிக் கொழுப்புப் பொருள்கள், நொதிப்பொருள், நீர் அயனி