பக்கம்:இளையர் அறிவியல் களஞ்சியம்.pdf/79

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இராமானுஜம்

69

மங்கித் தெரியும். இவர்கட்குத் தூக்கமும் சரிவர இருக்காது. உடல் வெளிறும். இதற்கு உரிய முறையில் மருத்துவம் செய்து கொள்வதன் மூலம் பயன் பெறலாம்.

இராமன், சி.வி. : இந்தியாவின் தலைசிறந்த இயற்பியல் அறிவியல் ஆய்வாளராகத் திகழ்ந்தவர். இவர் தமது அரிய ஆராய்ச்சிக் கண்டு பிடிப்பிற்காக நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானியாவார். இவரது முழுப்பெயர் சந்திரசேகர வேங்கடராமன் என்பதாகும். சுருக்கமாக ‘சி.வி. இராமன்’ என அழைக்கப்பட்டார். இவரது ஆராய்ச்சித் திறனைப் பாராட்டிய இங்கிலாந்து அரசு 1929ஆம் ஆண்டில் ‘சர்’ எனும் உயர்பட்டத்தை வழங்கிக் கௌரவித்தது. அன்று முதல் இவர் சர்.சி.வி. இராமன் என்றே அழைக்கப்பட்டார்.

இவர் 1888ஆம் ஆண்டு திருச்சியில் பிறந்தார். சென்னை மாநிலக் கல்லூரியில் இயற்பியல் துறையில் முதுகலைப் பட்டம் பெற்றார்.

சர் சி. வி. ராமன்

சிறிதுகாலம் இந்திய அரசின் துணைக் கணக்கு அலுவலராகப் பணியாற்றினார். பின்னர், 1917ஆம் ஆண்டுமுதல் கல்கத்தாப் பல்கலைக் கழகத்தில் இயற்பியல் பேராசிரியர் பணியை மேற்கொண்டார். அங்கிருந்தபோது ஆராய்ச்சியில் முனைப்புக் காட்டினார். 1928 இல் தன் ஆய்வுக்குறிப்புகளை இங்கிலாந்தில் இருந்த ராயல் சொசைட்டிக்கு அனுப்பினார். இவரது ஆராய்ச்சியைக் கண்டு பெரிதும் போற்றிய ராயல் சொசைட்டி இவரைத் தன் உறுப்பினராக்கி எஃப். ஆர். எஸ் என்ற விருது வழங்கிப் பாராட்டியது.

இவரது ஆராய்ச்சி ஒளி, ஒலி பற்றியதாகும். அது இவரது பெயராலேயே 'இராமன் விளைவு’ (Raman effect) என்று அழைக்கப் படலாயிற்று. இந்தப் புதிய கண்டுபிடிப்புக்காக 1980ஆம் ஆண்டில் நோபல் பரிசு பெற்றார். அறிவியல் ஆய்வுக்காக நோபல் பரிசு பெற்ற முதல் இந்தியர் என்ற சிறப்புக்குரியவரானார்.

இவர் 1933ஆம் ஆண்டில் பெங்களுரில் இருந்த இந்திய அறிவியல் ஆய்வுக் கழகத்தில் (Indian institute of science) இயற்பியல் துறைத் தலைவரானார். 1951ஆம் ஆண்டு வரை அங்கு பணியாற்றிய அவர் அவரது பெயரில் அமைந்த 'இராமன் ஆய்வு நிறுவனம் Gurth (Raman institute of Research) என்ற அமைப்பின் முதல் இயக்குநராக அமர்ந்து ஆய்வுப்பணியை செய்தார். இவர் 1970ஆம் ஆண்டு பெங்களுரில் மறைவெய்தினார்.

இராமானுஜம் : பழங் காலத்தில் கணிதத் துறையில் புகழ்பெற்று விளங்கிய இந்திய மாமேதைகள் ஆரியபட்டர், வராகமிஹிரர் போன்று அண்மைக் காலத்தில் கணிதமேதையாக வாழ்ந்து மறைந்தவர் இராமானுஜம்.

இவர் 1887ஆம் ஆண்டில் ஈரோட்டில் பிறந்தார். தன் இளமைக் கல்வியை தஞ்சை மாவட்டத்திலுள்ள கும்பகோணத்தில் கற்றார். அங்குப் பள்ளியில் படித்து வரும்போதே கணிதத்தில் மிகவும் ஆர்வமுடையவராக இருந்தார். இவரது கணித ஈடுபாடு ஆசிரியர்களையே திகைக்க வைப்பதாக இருந்தது.

இவர் கணிதத்தில் மட்டுமே கருத்தூன்றியவராக இருந்ததால் பிற பாடங்களில் மிகவும் பின் தங்கியவராக இருந்தார். காரணம் கணிதம் தவிர்த்துள்ள பிற பாடங்களை இவர் படிக்க விரும்பாமல் புறக்கணித்து வந்ததேயாகும். இதனால் இவர் கல்லூரித் தேர்வில் தேற முடியாமல் போயிற்று. இவரது கணக்கு