பக்கம்:இளையர் அறிவியல் களஞ்சியம்.pdf/9

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இடம் பெற்றுள்ள வரைபடங்கள் சிலவற்றை உரிய நேரத்தில் வரைந்தளித்துள்ள இளம் ஓவியக் கலைஞர் திரு இராசாராம் அவர்களின் ஒத்துழைப்பு என்னை பல சமயங்களில் நெகிழச் செய்துள்ளது. இதன் அச்சுப் பதிவுத் தயாரிப்பின்போது நூல் வடிவமைப்புக்கும் பக்க அமைப்புக்கும் பல அறிய ஆலோசனைகளை வழங்கிய திருமதி சித்தை செளதா அவர்கட்கும் என் நன்றி என்றும் உரியதாகும். உரிய கால எல்லைக்குள் இந் நூலை அழகிய முறையில் அச்சிட்டு வழங்கிய மீரா அச்சகம் பணியாளர்களுக்கும் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்ள கடமைப்பட்டுள்ளேன். இந்நூலின் அட்டைப் படத்தை கண்கவர் முறையில் பல வண்ணங்களில் வரைந்து உதவிய ஓவியக் கலைஞர் கலைமதி அவர்கட்கும் என் நன்றியைப் புலப்படுத்திக் கொள்கிறேன்.

காலத்தின் போக்குக்கேற்ப உருவாகியுள்ள அறிவியல் அறிவு பரப்புப் பணியின் தேவையை ஓரளவேனும் நிறைவுசெய்ய இந்துல் பெரிதும் துணை புரியும் என நம்புகிறேன். இளைஞர்களின் விரைவான அறிவியல் அறிவு வளர்ச்சிக்கும் அறிவியல் அடிப்படையிலான புரிந்துணர்வுக்கும், அறிவியல் கண்ணோட்டம் உருவாவதற்கும் இந்நூல் ஒரு ஆதார சுருதியாக அமையும் என்பதில் ஐயமில்லை. தமிழில் வெளிவந்துள்ள இளைஞர்க்கான முதல் அறிவியல் களஞ்சியம் எனும் சிறப்பும் இந்நூலுக்கு உண்டு.

முந்தைய எனது இலக்கிய, அறிவியல் நூல்களை ஆதரித்துப் போற்றிய தமிழுலகம் இந்நூலையும் ஏற்றிப் போற்றும் என்பதில் எனக்குப் பெரும் நம்பிக்கை உண்டு.

5-12-94
சென்னை -40

அன்பன்
மணவை முஸ்தபா
ஆசிரியர்